Advertisment

முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தெறிக்க விட்ட டீசர்!

சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் கிரிக்கெட் கனவு,

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கனா டீசர்

கனா டீசர்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் மிரட்டியுள்ள கனா படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

Advertisment

மிரட்டும் கனா டீசர் :

மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள கனா திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும் அவருக்குத் தந்தையாக சத்யராஜும் நடித்திருக்கிறார்கள்.

நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும் பெண் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் படம் இது.

கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் கிரிக்கெட் கனவு, மகளின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் தந்தை. கனா படம் குறித்து இப்படி ஏகப்பட்ட தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தன. இந்நிலையில் தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

அதனைத்தொடர்ந்து, தற்போது படத்தின் பட்டையை கிளம்ப்பும் டீசர் வெளியாகியுள்ளது. தந்தை கதாபாத்திரத்தில் வழக்கம் போல் சத்யராஜ் அதகளப்படுத்துவார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் முதன்முறையாக டீசரில் மிரட்டி இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

டீசரை பார்த்த அனைவரும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை பார்க்க ஆவலாக காத்திருப்பதாக கூறியுள்ளனர். அச்சு அசல் கிராமத்து பெண்ணாகவே மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்ட பெண்ணாக நடித்துள்ளார்.

கனா டீசர் கனா டீசரில் சிவகார்த்திகேயன்

டீசரில் கடைசியில் தோன்றினாலும் ரசிகர்களை மாஸ் காட்டி கவர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரரும் எடுக்கிறார் சிவகார்த்திகேயன்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment