/tamil-ie/media/media_files/uploads/2019/05/kanchana-3-collections.-2.jpg)
Kanchana 3 Movie Latest Box Office Collections: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத் தாக்குதலைத் தாண்டி, காஞ்சனா 3 திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த ஆண்டின் கலெக்ஷனில் டாப் 10 படங்களில் காஞ்சனா 3 இடம் பிடிக்கிறது.
காஞ்சனா 3 திரைப்படம், ராகவா லாரன்ஸின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி வெளியானது. படம் ரிலீஸான முதல் நாளே முழுப் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், ஆன் லைனில் வெளியிட்டது.
Kanchana 3 Movie Latest Box Office Collections: 110 கோடி ரூபாய் வரை காஞ்சனா 3 வசூலிக்கும்.Kanchana 3 Movie Succeeds TamilRockers By Box Office Collections: காஞ்சனா 3 வசூல் நிலவரம்
எனினும் குழந்தைகளையும், பெண்களையும் குறி வைத்து ராகவா லாரன்ஸ் எடுத்த காஞ்சானா 3 அவரை ஏமாற்றவில்லை. ஜாலியான பேய்க் கதைக்கென்றே இருந்து வரும் குடும்ப ஆடியன்ஸ், தியேட்டர்களுக்கு படையெடுத்தது. இதனால் முதல் வாரமே உலகம் முழுவதும் 100 கோடி ரூபாயைத் தாண்டி சம்பாதித்தது காஞ்சனா 3.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 3 மாநிலங்களிலும் இந்த ஆண்டின் டாப் 10 கலெக்ஷன் படங்கள் பட்டியலில் காஞ்சனா 3 இடம் பிடித்துவிட்டதாக திரையுலக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதுவும், மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாராகி டாப் 10-ல் இடம் பிடித்திருக்கும் ஒரே படம், காஞ்சனா 3 மட்டுமே.
20 நாள் முடிவில் ஆந்திரா, தெலங்கானா கலெக்ஷன் 30 கோடி ரூபாயைத் தாண்டியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் 68.5 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக திரையுலக வட்டாரங்களில் கூறுகின்றனர். இரு மாநிலங்களிலும் 110 கோடி ரூபாய் வரை காஞ்சனா 3 வசூலிக்கும் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இதற்கிடையே தமிழ் ராக்கர்ஸில் காஞ்சனா 3 படத்திற்காக மொய்க்கும் ஆன் லைன் அபிமானிகளின் எண்ணிக்கையும் குறைந்ததாக தெரியவில்லை. அதையும் மீறி இந்தப் படம் நிற்பதுதான் சாதனை.
காஞ்சனா 3 மட்டுமல்ல, மாரி 2, ரஜினியின் 2.0, பேட்ட, அஜீத்தின் விஸ்வாசம் படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அண்மையில் வெளியான தேவராட்டம் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் பந்தி வைத்துவிட்டது. இதற்கெல்லாம் தமிழ் சினிமா உலகம் பெரிதாக ரீயாக்ட் செய்யவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us