ஹர்திக்கின் முன்னாள் காதலியை ’டேட்’ செய்யும் ரிஷப்… 2019-ம் ஆண்டின் வைரல் நாயகன்!

இஷா தான் பாண்ட்டின் வாழ்வில் கிடைத்த லக்கி சார்ம் என்று கருதினார்கள். ஆனால் நிலைமை என்னவோ தற்போது வேறொன்றாக இருக்கிறது!

Rishabh Pant dating Bollywood actress Urvashi Rautela : இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்தும் அவர்களின் காதல்கள் குறித்தும் அடிக்கடி சமூக வலைதளங்களில் விமர்சிப்பது பழகிவிட்ட சூழலில் தங்களின் ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அடிக்கடி கண்டெண்ட் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர் வீரர்கள். தற்போது ரிஷப் பாண்ட் யாரை காதலிக்கிறார் என நெட்டிசன்கள் கேள்வியாய் கேட்டு துளைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..

பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதெலாவுடன் பாண்ட் டேட்டிங் செய்வதாக தகவல்கள் கசிந்த நிலையில் இருவரும் ஒன்றாக டின்னர் சென்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார் ஊர்வசி. ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவுடன் இவர் டேட்டிங் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நடிகைக்கு அவர் நாய்க்குட்டி வாங்கி கொடுத்ததெல்லாம் தனிக்கதை. ஆனால் தற்போது ஹர்திக் பாண்டியா நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரை டேட்டிங் செய்து வருகிறார்.

இந்த வருடத்தின் துவக்கத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரிஷப் பாண்ட் பதிவேற்றிய புகைப்படம்

 

View this post on Instagram

 

I just want to make you happy because you are the reason I am so happy ❤️

A post shared by Rishabh Pant (@rishabpant) on

இந்த வருடத்தின் துவக்கத்தில் ரிஷப் பாண்டே தன்னுடைய பெண் தோழியான இஷாவுடன் இணைந்து புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார். பலரும் இஷா தான் பாண்ட்டின் வாழ்வில் கிடைத்த லக்கி சார்ம் என்று கருதினார்கள். ஆனால் நிலைமை என்னவோ தற்போது வேறொன்றாக இருக்கிறது!

இது மட்டும் இல்லாமல் இந்த வருடம் முழுவதும் சமூக வலைதளங்கள்ளில் அடிக்கடி பேசப்பட்ட நபராகவும் ரிஷப் இருக்கிறார். ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னே குழந்தைக்கு பேபி-சிட்டிங் இருந்தது வைரலானது. இந்த ஆண்டு கூகுளில் அதிக அளவு தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 6ம் இடத்தை பிடித்தார் இவர்.

READ SOURCE