scorecardresearch

Monster Movie In Tamilrockers: காஞ்சனா 3 டிஜிட்டல் பிரின்ட், மான்ஸ்டர்… தமிழ் ராக்கர்ஸின் ‘வீக் என்ட்’ கொண்டாட்டம் நியாயமா?

Latest tamil Movies in tamilrockers: சினிமாத் துறையினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், எதுவும் செய்ய முடியாமல் கைகளை பிசைந்தபடி இருக்கிறார்கள்.

Kanchana 3 full movie HD print, tamilrockers, monster, tamil movie, காஞ்சனா 3 ஃபுல் மூவி இன் தமிழ்
Tamilrockers Leaked Monster Tamil Movie: மான்ஸ்டர் படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்

Tamilrockers Leaked Kanchana 3 Full Movie HD Print, natpuna ennanu theriyuma, mr local and Monster: தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், வார இறுதி நாட்களில் அடுத்தடுத்து புதுப்படங்களையும், ஏற்கனவே வெளியான படங்களில் டிஜிட்டல் பிரிண்ட்களையும் திருட்டுத்தனமாக ஆன் லைனில் வெளியிட்டு அதிர்வை கிளப்பி வருகிறது. இந்த முறை காஞ்சனா 3 படத்தின் டிஜிட்டல் பிரிண்ட், மான்ஸ்டர், நட்புன்னா என்னான்னு தெரியுமா உள்ளிட்ட படங்களை வெளியிட்டிருக்கிறது.

காஞ்சனா 3 படம், கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ரிலீஸ் ஆனது. அன்றே இந்தப் படத்தை முழுமையாக ஆன் லைனில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். எனினும் அதையும் மீறி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது காஞ்சனா 3.

Kanchana 3 full movie HD print, tamilrockers, monster, tamil movie, காஞ்சனா 3 ஃபுல் மூவி இன் தமிழ்
Mr Local Tamil Movie in tamilrockers

Kanchana 3, natpuna ennanu theriyuma, mr local, Monster tamil Movies in tamilrockers: தமிழ் சினிமாவின் வில்லன் தமிழ் ராக்கர்ஸ்

காஞ்சனா 3 வெற்றியைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட இதர படங்களும், தமிழ் ராக்கர்ஸில் சக்கை போடு போட்டன. ராகவா லாரன்ஸ் படங்களுக்கு ஆன் லைன் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை புரிந்து கொண்டு, மே 18-ம் தேதி காஞ்சனா 3 ஹெச்.டி. பிரிண்டை சட்டவிரோதமாக தனது இணையதளத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

காஞ்சனா 3 வெளியாகி ஒரு மாதம் கழித்தும், ரசிகர்களை இழுக்க வீக் என்ட் தருணத்தில் டிஜிட்டல் பிரிண்டை இறக்கி விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல நட்புன்னா என்னான்னு தெரியுமா, மான்ஸ்டர், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களையும் இந்த வார இறுதியில் சட்ட விரோதமாக தனது இணையதளத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருக்கிறது.

அடுத்தடுத்து தமிழ் ராக்கர்ஸ் இதுபோல புதுப்படங்களை வெளியிட்டு வருவது சினிமாத் துறையினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், எதுவும் செய்ய முடியாமல் கைகளை பிசைந்தபடி இருக்கிறார்கள். நீதிமன்றம் சென்று உத்தரவு பிறப்பித்தாலும்கூட, தமிழ் ராக்கர்ஸ் அதற்கு கட்டுப்படாமல் தொடர்ந்து படங்களை ரிலீஸ் செய்து விடுகிறது. இதற்கு முடிவு எப்போது? என்பது யாருக்கும் தெரியவில்லை.

 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kanchana 3 full movie tamilrockers monster tamil movie

Best of Express