Advertisment

Kanchana 3 Full Movie: முழுநீள காமெடி திகில் கதை, காஞ்சனா 3 வசூல் சாதனை

Kanchana 3 Movie Latest News: முழுநீள காமெடி கலந்த திகில் கதைக்கு ரசிகர்கள் ஆரவார வரவேற்பு கொடுப்பதை உணர்த்தியிருக்கிறது காஞ்சனா 3. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை மீறி இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanchana 3 Movie, Raghava Lawrence, tamilrockers, Kanchana 3 Latest News, Box Office Collection, காஞ்சனா 3

Kanchana 3 Movie, Raghava Lawrence, tamilrockers, Kanchana 3 Latest News, Box Office Collection, காஞ்சனா 3

Kanchana 3 Latest News and Box Office Collection: காஞ்சனா 3 படம் , தமிழ் ராக்கர்ஸை மீறி பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் தொடர்ந்த்ு வெற்றிக் கொடி நாட்டி வருகிறது. ஒரு வாரத்தில் உலக அளவில் 100 கோடி ரூபாயைக் குவித்திருக்கிறது காஞ்சனா 3. முழுநீள காமெடி கலந்த திகில் கதைக்கு ரசிகர்கள் ஆரவார வரவேற்பு கொடுப்பதை உணர்த்தியிருக்கிறது காஞ்சனா 3. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை மீறி இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

Advertisment

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அவரே நடித்து, முனி பட வரிசையில் வெளியான 4-வது படம் காஞ்சனா 3. இந்தப் படம் கடந்த 19-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. தெலுங்கில் ஒரே வாரத்தில் ரூ 14 கோடி குவித்திருக்கிறது. டப்பிங் படங்களில் இது குறிப்பிடத்தக்க சாதனை.

Kanchana 3 Movie, tamilrockers, Box Office Collection, காஞ்சனா 3 Kanchana 3 Movie Latest News: 100 கோடி ரூபாய் வசூலில் குவித்திருக்கிறது காஞ்சனா 3

Kanchana 3 Full Movie in tamilrockers and Box Office Collection: காஞ்சனா 3 படம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்

தமிழ்நாட்டில் முதல் நாளில் மட்டும் 12 கோடி ரூபாயை கல்லாக் கட்டியது காஞ்சனா 3. முதல் வார முடிவில் கலெக்‌ஷன் 60 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது. உலகம் முழுவதும் முதல் வார முடிவில் 100 கோடி ரூபாய் வசூலில் குவித்திருக்கிறது காஞ்சனா 3.

காஞ்சனா 3 படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் காஞ்சனா 3 படத்தை முழுமையாக வெளியிட்டது. அதையும் மீறி வசூலில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம், ஜாலியான பேய்க் கதைப் படங்களுக்கு ‘பி’ மற்றும் ‘சி’ செண்டர்களில் கிடைத்து வரும் வரவேற்புதான்.

ஒருவேளை தமிழ் ராக்கர்ஸ் இந்தப் படத்தை இணையதளத்தில் வெளியிடாமல் இருந்திருந்தால், வசூல் இதைவிட பிரமாண்டமாக இருந்திருக்கக்கூடும்.

Raghava Lawrence Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment