TamilRockers kanchana 3 HD Print, தமிழ் ராக்கர்ஸ், ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படத்தின் ’மோஷன் போஸ்டர்’ ஒரே நாளில் 20 லட்சம் பார்வையாளர்கள் கடந்ததற்கு ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
Advertisment
சன் பிக்சர்ஸ் வழங்கம், ராகவா லாரன்ஸ் தயாரித்து இயக்கி நடித்திருக்கும் முனி 4 காஞ்சனா-3 படத்தின் ‘மோஷன் போஸ்டர்’ நேற்று வெளியானது. வெளியான ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அது 10 மில்லியன் பார்வையாளர்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
kanchana 3 : காஞ்சனா 3 மோஷன் போஸ்டர் சாதனை
இதற்கு ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இந்தளவு வைரலாக காரணமான என் ரசிகர்கள், இணைய தளம், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களும் ‘மோஷன் போஸ்டரை’ பார்த்து விட்டு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
Hi dear Friends and Fans..! Yesterday my Kanchana3 motion poster has released and it has reached 2 M in one day. My heart full Thanks to all my fans , @sunpictures and other hero fans as well who has wished me heartfully. https://t.co/E9MULZg8sspic.twitter.com/5edkcrUTFT
இப்படம் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தில் பிக் பாஸ் 1 பிரபலம் ஓவியா நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தந்துள்ளது.