/tamil-ie/media/media_files/uploads/2019/05/raghava-lawrence...-1.jpg)
Kanchana 3 Box Office Collection, Kanchana 3 Full Movie In Tamilrockers, காஞ்சனா 3
Raghava Lawrence's Kanchana 3 Movie Box Office Collection Latest Report: ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் கலக்குகிறது. தமிழ் ராக்கர்ஸில் இந்தப் படம் வெளியானபோதும், 150 கோடி கலெக்ஷன் கிளப்பில் இணைந்திருக்கிறது. குறிப்பாக தெலுங்கில் இதன் கலெக்ஷன் அஜீத், விஜய் தரப்பையே வியக்க வைத்திருக்கிறது.
காஞ்சனா 3 படம், கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. அன்றே ஆன் லைனில் தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக இந்தப் படத்தை வெளியிட்டது. அண்மையில் கூடுதலாக இந்தப் படத்தின் ஹெச்.டி. பிரிண்டையும் வெளியிட்டு அதிர வைத்தது தமிழ் ராக்கர்ஸ்.
Kanchana 3 Movie Box Office Collection In Telugu: விஜய், அஜீத் படங்களை விஞ்சியது
ஆனாலும் காஞ்சனா 3 படத்தை தியேட்டர்களில் பார்க்கும் கூட்டத்தை தமிழ் ராக்கர்ஸ் பாதித்ததாக தெரியவில்லை. இதுவரை உலக அளவில் 150 கோடி ரூபாய் கலெக்ஷன் அள்ளியிருக்கிறது காஞ்சனா 3. அதில் தமிழக கலெக்ஷன் மட்டுமே 70 கோடி என்கிறார்கள்.
ஆந்திராவில் இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங் 11 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. அங்கு 18 கோடி ரூபாயை இந்தப் படம் கலெக்ஷன் செய்திருக்கிறது. டப்பிங் பட கலெக்ஷனில் இது விஜய், அஜீத் படங்களே செய்யாத சாதனை என்கிறார்கள்.
இதற்கிடையே இந்தி பட ரீமேக்கை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும், சின்ன அவமரியாதை காரணமாக அந்த வாய்ப்பை உதறியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். குறிப்பாக அக்ஷய் குமாரை இயக்கும் வாய்ப்பு அது. இதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் ராகவா லாரன்ஸின் இமேஜ் இன்னும் கூடியிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.