scorecardresearch

ராகவா லாரன்ஸின் ‘அன்னையர் தினம்’ டச்: புதிய அமைப்பு, புதிய பாடல்

Raghava Lawrence: பெற்றோரை அனாதை இல்லங்களில் விட்டு சென்ற பிள்ளைகள், அவர்களை பார்ப்பதற்கு கூட வருவதில்லை.

Kanchana 3 Movie, Raghava Lawrence Mother's Day song, காஞ்சனா 3
Kanchana 3 Movie, Raghava Lawrence Mother's Day song, காஞ்சனா 3

Kanchana 3 Movie Hero Raghava Lawrence Releases song on mother’s day: செண்டிமெண்ட், திகில், காமெடி கலந்து சினிமாவில் கலக்கும் ராகவா லாரன்ஸ், நிஜத்திலும் செண்டிமெண்ட் மிக்கவர்தான். அண்மையில் காஞ்சனா 3 நாயகன், தனது தாயாரின் பிறந்த நாளையொட்டி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ரசிகர்களை சிலிர்க்க வைத்தார்.

அடுத்தபடியாக, மே 12-ம் தேதி அனுசரிக்கப்படும் அன்னையர் தினத்தை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘கல்மனம் படைத்த சிலரால் பெற்றோர் அனாதை இல்லங்களிலும், சாலை ஓரங்களிலும், குப்பை மேடுகளிலும், குடியிருக்கும் அவலங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

tamilrockers link, kanchana 3 movie, Kanchana 3 Box Office Collections, காஞ்சனா 3 திரைப்படம்

இவர்களை போன்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஈன்றெடுத்த தெய்வங்களை அவர்களின் இறுதி காலம் வரை கண்கலங்காமல் வைத்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தாய் என்னும் விழிப்புணர்வு சேவையை தொடங்கி, தமிழகம் முழுவதும் அதனை பரப்ப முடிவு செய்திருக்கிறேன்.

பெற்றோரை அனாதை இல்லங்களில் விட்டு சென்ற பிள்ளைகள், அவர்களை பார்ப்பதற்கு கூட வருவதில்லை. அதன் விளைவாக யாரைப் பார்த்தாலும் தங்கள் மகன் என அரவணைத்து தற்காலிக சந்தோஷம் கொள்கின்றனர் சில தாய்மார்கள்.

இப்படி எனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தின் பாதிப்பு தான், இந்த அமைப்பை உருவாக்க காரணமாக இருக்கிறது. இனி எந்த ஒரு தாய் – தந்தையும் முதியோர் இல்லத்திற்கு சென்று விடக்கூடாது. ஏற்கனவே விடப்பட்டிருந்தால் திரும்ப வரவழைத்து கோயில் தெய்வம் போல வழங்குவோம்’. இவ்வாறு தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

அன்னையரின் மேன்மையை சொல்லும் விதமாக விழிப்புணர்வு பாடல் ஒன்றையும் அன்னையர் தினத்தன்று வெளியிடுகிறார் ராகவா லாரன்ஸ். காஞ்சனா 3 நாயகனின் இந்தப் பாடல் பட்டையை கிளப்புமா? பார்க்கலாம்.

 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kanchana 3 movie hero raghava lawrence mothers day song