Kanchana 3 movie Latest Box Office Report and Raghava Lawrence's Next Movie: காஞ்சனா 3 படத்தின் வெற்றி, ராகவா லாரன்ஸை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதை மையமாக வைத்து அடுத்தடுத்த ‘மூவ்’களையும் தீர்மானித்துவிட்டார் அவர்.
தமிழ் சினிமாவில், ஒரு படத்தின் வெற்றியைப் போல அதன் அடுத்த பாகம் பிரமாண்டமாக இருப்பதில்லை. சிங்கம் 3 பாகங்கள் வந்தாலும், முதல் பாகம்தான் மாஸ். அதேபோல சாமி 2, சண்டக்கோழி 2 ஆகியன முதல் பாகத்தின் வெற்றியைத் தொடவில்லை.
kanchana 3 full movie in tamilrockers: தமிழ் ராக்கர்ஸை மீறிய காஞ்சனா 3 வெற்றி
Kanchana Full Movie With comedy scenes Succeeds TamilRockers: காஞ்சனா 3 வசூலில் 115 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது.
ரஜினிகாந்திடம், ‘பாட்ஷா 2’ எடுப்பது குறித்து சிலர் பேசியபோது அவர் சொன்னது, ‘பாட்ஷா, ஒரு பாட்ஷாதான்’ என்றார். ஆனால் இந்த ஃபார்முலாவை உடைத்து முனி பட வரிசையில் 4-வது படமாக காஞ்சனா 3 படத்தை பெரும் வெற்றிப் படமாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த 19-ம் தேதி வெளியான காஞ்சனா 3 வசூலில் 115 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது. ஜாலியான காமெடி கலந்த பேய்க் கதையாக தனது முனி வரிசைப் படங்களை உருவாக்கி வரும் ராகவா லாரன்ஸ், இதிலும் அதே ஃபார்முலாவை வெற்றிகரமாக கையாண்டிருக்கிறார். இதனால் காஞ்சனா 3 படத்தைக் காண குடும்பம் குடும்பமாக தியேட்டர்களை முற்றுகையிடுகிறார்கள்.
இத்தனைக்கும் காஞ்சனா 3 ரிலீஸான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் முழுப் படத்தையும் வெளியிட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. அதையும் தாண்டியே இந்த வெற்றி.
சரியாக கோடை விடுமுறையை மையமாகக் கொண்டு, முனி வரிசை படங்களை ராகவா லாரன்ஸ் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. காஞ்சனா 3 படம் வெற்றியைத் தொடர்ந்து, காஞ்சனா 4 படத்திற்கு ராகவா லாரன்ஸை இப்போதே சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துவிட்டது.
காஞ்சனா 3 படத்தின் இந்திப் பதிப்பு வேலைகளில் இறங்கியிருக்கும் ராகவா லாரன்ஸ், அதை முடித்துவிட்டு காஞ்சனா 4 படத்திற்கு தயாராக இருக்கிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் காஞ்சனா 4 வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
அஜீத், விஜய் படங்கள் கூட திருவிழாக் காலங்களில் வெளியாகியே கல்லாக் கட்டுகின்றன. ராகவா லாரன்ஸ் தனக்கான பாணியை உருவாக்கிக் கொண்டு, கோடை விடுமுறையை குறி வைத்து கலக்குகிறார்.