/tamil-ie/media/media_files/uploads/2019/05/raghava-lawrence-rajinikanth-1.jpg)
Tamil Nadu news today live updates
Raghava Lawrence Meets Rajinikanth: காஞ்சனா 3 படம் ரிலீஸான முதல் தினமே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானாலும்கூட, அதையும் மீறி நல்ல கலெக்ஷனைக் கொடுத்திருக்கிறது. இந்தச் சூழலில் மும்பையில் காஞ்சனா பட ஹீரோயின் வேதிகாவுடன் மும்பைக்கு சென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார் ராகவா லாரன்ஸ். அதற்கான காரணத்தை அவரே பகிர்ந்திருக்கிறார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட ராகவா லாரன்ஸ், ‘காஞ்சனா 3 வெற்றிக்கு பிறகு நானும் வேதிகாவும் எனது குரு, தலைவர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றோம்’ என குறிப்பிட்டிருக்கிறார்.
ரஜினியின் குருவான இயக்குனர் பாலச்சந்தரால், ‘அடுத்த ரஜினி’ என முன்பொருமுறை புகழப்பட்டவர் ராகவா லாரன்ஸ். ரஜினி அளவுக்கு வளராவிட்டாலும், காஞ்சனா வரிசைப் படங்கள் வெற்றி பெற்று வருவது ராகவா லாரன்ஸுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
A memorable moment in my life! Simply in awe and enlightened by the magnificent aura of @rajinikanth sir. He is truly humility, innocence and positivity personified. Thank you sir for your benevolence and kind words ????☺. @offl_Lawrence#Kanchana3pic.twitter.com/ycZLglZjAJ
— Vedhika (@Vedhika4u) 1 May 2019
ரஜினிகாந்தை தனது ஆத்மார்த்த வழிகாட்டியாக எடுத்துக்கொண்ட லாரன்ஸ், குருவாகவும் தலைவராகவும் ரஜினிகாந்தை குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல வேதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த சந்திப்பை மறக்க முடியாத தருணமாக குறிப்பிட்டிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.