Tamilrockers Leaked kanchana 3 full movie to watch online Can’t stop it’s box office: ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா 3 படம், வசூலில் தொடர்ந்து கலக்கி வருகிறது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் காஞ்சனா 3 படம் வெளியானாலும்கூட, தியேட்டர்களுக்கு வரும் கூட்டம் குறையவில்லை.
காஞ்சனா 3 படம், கடந்த 19-ம் தேதி ரிலீஸ் ஆனது. முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் இந்தப் படத்தை வெளியிட்டது. அதையும் மீறி பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து கல்லா கட்டி வருகிறது காஞ்சனா 3.

Kanchana 3 Movie Succeeds TamilRockers: தமிழ் ராக்கர்ஸை மீறிய வெற்றி
3-வது வாரத்தை தொட்ட நிலையில் இந்தப் படத்தின் கலெக்ஷன் 120 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது. குறிப்பாக ஆந்திராவில் இதற்கு முன்பு வேறு டப்பிங் படங்கள் எதுவும் செய்யாத வசூல் சாதனையை காஞ்சனா 3 படைத்து வருகிறது.
நிஜாம் 5.8 கோடி, உத்தராந்திரா 2.4 கோடி, கிழக்கு ஆந்திரா 1.53 கோடி, மேற்கு 1.12 கோடி, குண்டூர் 1.30 கோடி, நெல்லூர் 0.64 கோடி என தியேட்டர் கலெக்ஷன், டப்பிங் உரிமம் என சுமார் 18 கோடி வருவாயை ஈட்டியிருக்கிறது காஞ்சனா 3.
தமிழ்நாடு கலெக்ஷன், வெளிநாட்டு உரிமம் என 120 கோடி ரூபாயை கடந்திருக்கும் காஞ்சனா 3, அடுத்த சில நாட்களில் ரூ 150 கோடி இலக்கை எட்டிவிடும் என்கிறார்கள் சினிமாப் புள்ளிகள்.
இத்தனைக்கும் காஞ்சனா 3 தொடர்பான விமர்சனங்கள் ரொம்பவும் பாசிட்டிவாக இல்லை. ஆனாலும் ஜாலியான பேய்க் கதைகளை மக்கள் குடும்பம் குடும்பமாக ரசிக்க கிளம்பியிருப்பதாலும், இந்தக் கோடை விடுமுறையில் வேறு பெரிய படங்கள் இல்லாததாலும் காஞ்சனா 3 காட்டில் அடை மழை!
இந்த களேபரத்தில் ஆன் லைனில் காஞ்சனா 3-ஐ தேடும் கூட்டம் குறைவாக இல்லை என்பதே நிஜம். ஒருவேளை ஆன் லைன் டவுண்லோடுகள் தவிர்க்கப்பட்டால், காஞ்சனா 3 வசூல் இதைவிட பல மடங்கு அதிகமாக இருந்திருக்கும்.
ஆனாலும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் காஞ்சனா 3-ஐ தொடர்ந்து தேவராட்டம், கே 2, லூசிபர் என ஒவ்வொரு படத்தையும் தனது இணைய பக்கத்தில் ரிலீஸ் செய்தே வருகிறது. இதற்கு மூக்கணாங்கயிறு போடத் தெரியாமல் திணறுகிறது திரையுலகம்.