Advertisment

Kanchana 3: கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த காஞ்சனா 3!

Kanchana 3 Video Songs: இதனை 1 கோடியே 31 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.

author-image
WebDesk
May 06, 2019 15:43 IST
New Update
Kanchana 3 video songs

Kanchana 3 Video Songs: நடிகரும் இயக்கநருமான ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘காஞ்சனா 3’

Advertisment

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற ’முனி’ திரைப்படத்தின் 4-ம் பாகமாகவும், காஞ்சனாவின் 3-ம் பாகமாகவும் இந்தப் படம் வெளியாகியிருக்கிறது.

இதில் வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

கடந்த 19-ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் காஞ்சனா 3 படத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்துப் பாடல்களின் வீடியோக்களும் யூ ட்யூபில் வெளியாகிவிட்டன.

Kanchana 3 Video Songs

இதில் முதலாவதாக ’ஷேக் யுவர் பாடி’ என்ற பாடலின் வீடியோ ஏப்ரல் 12-ம் தேதி வெளியானது. இப்போது வரை இந்தப் பாடலை 5 லட்சத்துக்கு 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யூ-ட்யூபில் பார்த்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ‘ஒரு சட்டை ஒரு பல்பம்’ என்ற வீடியோ பாடல் ஏப்ரல் 14-ம் தேதி வெளியானது. இதனை 1 கோடியே 31 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.

பின்னர் ஏப்ரல் 30-ம் தேதி, ‘நண்பனுக்கு கோயில கட்டு’ என்ற பாடல் வெளியானது. இந்தப் பாடல் 46 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது.

மே 1-ம் தேதி வெளியான ‘கெட்ட பய சார் காளி’ என்ற பாடலை 29 லட்சத்தும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

இறுதியாக மே 3-ம் தேதி ‘காதல் ஒரு விழியில்’ என்ற ரொமாண்டிக் பாடல் வெளியானது. இந்தப் பாடல் இதுவரை 13 லட்சம் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது.

#Oviya #Raghava Lawrence #Sun Pictures
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment