scorecardresearch

காஞ்சனா 3 இந்தி ரீமேக்: வெளியானது ‘ஃபர்ஸ்ட் லுக்’

kanchana 3 in tamilrockers 2019: காஞ்சனா 3 ரிலீஸான கடந்த ஏப்ரல் 19-ம் தேதியே இந்தப் படத்தை, தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டது.

Kanchana 3 Full Movie, Kanchana 3 Full Movie Download, காஞ்சனா 3, kanchana 3 tamilrockers 2019
Kanchana 3 Full Movie, Kanchana 3 Full Movie Download, காஞ்சனா 3, kanchana 3 tamilrockers 2019

Kanchana 3 movie Hindi remake Lakshmi Bomb: ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து தமிழில் வெற்றி பெற்ற காஞ்சனா 3 படம், இந்தியில் தயாராகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. இந்திப் பதிப்பில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.

காஞ்சனா 3 படத்தை தமிழில் ராகவா லாரன்ஸும், சன் பிக்சர்ஸும் இணைந்து தயாரித்தனர். ராகவா லாரன்ஸ் இயக்கி, அவரே கதாநாயகனாகவும் நடித்தார். ஜாலியான பேய்க் கதையை உள்ளடக்கிய இந்தப் படத்திற்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

காஞ்சனா 3 ரிலீஸான கடந்த ஏப்ரல் 19-ம் தேதியே இந்தப் படத்தை, தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டது. ஆனாலும் தியேட்டர்களில் கூட்டம் குறையவில்லை. உலகம் முழுவதும் 125 கோடி ரூபாய்க்கும் அதிகமாக காஞ்சனா 3 வசூலித்தது.

தமிழில் வெற்றி பெற்ற காஞ்சனா 3 படத்தை இந்தியில் இயக்க, ராகவா லாரன்ஸ் முடிவு செய்தார். இந்தியில் இந்தப் படத்திற்கு ‘லக்‌ஷ்மி பாம்ப்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்‌ஷய்குமார், லக்‌ஷ்மி பாம்ப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அக்‌ஷய்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், ‘வெடிகுண்டு போன்ற கதையுடன் வருகிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார் அக்‌ஷய். இந்தப் படத்தை 2020 ஜூன் 5-ம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கும் தகவலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழில் வெளியான காஞ்சனா 3-ஐப் போல, லக்‌ஷ்மி பாம்ப் பட்டையைக் கிளப்புமா? என்பது அப்போதுதான் தெரியும்.

 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kanchana 3 tamil movie remake lakshmi bomb first look

Best of Express