Kanchana 3 Tamil Movie became victim, can Mr Local and Monster escape from TamilRockers: விஸ்வாசம், பேட்ட படங்களுக்கு பிறகு அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது காஞ்சனா 3. முந்தைய இரு படங்களைவிட இது குறைந்த பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்கு ஒரு வகையில் தமிழ் ராக்கர்ஸுக்கும் படக் குழு நன்றி கூற வேண்டியிருக்கும் என்கிறார்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள்.
காரணம் இதுதான்… கடந்த ஏப்ரல் 19-ம் தேதி காஞ்சனா 3 ரிலீஸ் ஆன அன்றே, தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் காஞ்சனா 3 படத்தை திரையிட்டுவிட்டது. முதல் நாளே இந்தப் படம் ஆன் லைனில் ரிலீஸ் ஆனதில் படக்குழு ஆடிப் போனது நிஜம்.
TamilRockers Leaked Tamil Movies To Free Download: காஞ்சனா 3 நிலைமை மற்ற படங்களுக்குமா?
ஆனால் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டாலும்கூட, தியேட்டர்களில் கூட்டம் குறையவில்லை. குடும்பம் குடும்பமாக காஞ்சனா 3-ஐ காண ரசிகர்கள் வந்தார்கள். ஜாலியான பேய்ப் படங்கள் மீது தொலைக்காட்சித் தொடர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மார்க்கெட்டை அப்படியே காஞ்சனா 3 பயன்படுத்திக் கொண்டது.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இந்தப் படத்தை திருட்டுத்தனமாக ரிலீஸ் செய்யாமல் இருந்திருந்தால், இந்தப் படத்தின் வசூல் மேலும் அதிகரித்திருக்கும் என்பது ஒரு வாதம். இன்னொரு தரப்போ, தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் இந்தப் படத்தை பார்த்தவர்களும், குடும்பம் குட்டியுடன் தியேட்டரை முற்றுகையிட்டதே படத்தின் வெற்றிக்கு காரணம் என்கிறார்கள்.
காஞ்சனா 3 படம் 25-வது நாளை கடந்து ஓடிக்கொண்டிருப்பது தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஊடகத் துறையினர், நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி கூறியிருக்கிறார். ஒருவேளை தமிழ் ராக்கர்ஸுக்கும் நன்றி கூறியிருக்க வேண்டுமோ?
இதற்கிடையே லேட்டஸ்டாக ரிலீஸ் ஆகியிருக்கும் மிஸ்டர் லோக்கல், மான்ஸ்டர் படங்களுக்கும் தமிழ் ராக்கர்ஸின் மிரட்டல் இருக்கிறது. மிஸ்டர் லோக்கல் படம், சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் படம். மான்ஸ்டர், எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம். இந்தப் படத்திற்கு பாசிட்டிவான ரிவியூ வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.