Kanchana 3 Tamil Movie: ராகவா லாரன்ஸை ஸ்டார் ஆக்கிய காஞ்சனா 3

Kanchana 3 Full Movie In TamilRockers: ஆன் லைனில் காஞ்சனா 3 படத்திற்காக மொய்க்கும் ரசிகர்கள் ஒருபுறம் இருந்தாலும், தியேட்டர்களில் குடும்பம் குடும்பமாக காஞ்சனா...

Kanchana 3 full movie to free download in tamilrockers Not Affected Box office: காஞ்சனா 3 படத்தின் அதிரடி வசூல், ராகவா லாரன்ஸை ஸ்டார் ஆக்கிவிட்டது. தமிழ் ராக்கர்ஸ் தாக்குதலை மீறி, கலெக்‌ஷனை குவிக்கிறது காஞ்சனா 3.

காஞ்சனா 3 படம், கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆன முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இந்தப் படத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டது. எனினும் ஜாலியான பேய்க்கதை என்ற அடிப்படையில் காஞ்சனா 3 படத்திற்கு தியேட்டர்களிலும் கலெக்‌ஷன் குறையவில்லை.

ஆன் லைனில் காஞ்சனா 3 படத்திற்காக மொய்க்கும் ரசிகர்கள் ஒருபுறம் இருந்தாலும், தியேட்டர்களில் குடும்பம் குடும்பமாக காஞ்சனா 3-ஐ பார்க்கும் ரசிகர்களுக்கும் குறைவில்லை. குறிப்பாக குழந்தைகளும் இந்தப் படத்தை கொண்டாடுவதுதான்.

Kanchana 3 full movie free download, Raghava Lawrence, காஞ்சனா 3 ஃபுல் மூவிஸ் தமிழ்

Kanchana 3 Tamil Movie Succeeds tamilrockers: காஞ்சனா 3 படத்திற்கு தியேட்டர்களிலும் கலெக்‌ஷன் குறையவில்லை.

இது வரையிலான நிலவரப்படி, தமிழகத்தில் மட்டும் காஞ்சனா 3 படத்தின் வசூல் 70 கோடியை தாண்டியிருக்கிறது. இது பெரிய நடிகர்களின் படங்களுக்கான வசூல் ஆகும். ராகவா லாரன்ஸின் இந்தப் பட வெற்றியைத் தொடர்ந்து, அவருக்கான ரசிகர் பலமும் அதிகரித்து வருகிறது.

இந்தியில் இதே படத்தை அவர் எடுக்கவிருப்பது, காஞ்சனா 4 படத்திற்கு இப்போதே சன் பிக்சர்ஸ் புக் செய்திருப்பது ஆகியன அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன. தமிழின் முன்னணி நடிகர்கள் வரிசையில் ராகவா லாரன்ஸையும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது காஞ்சனா 3.

இது ஒருபுறம் இருக்க, ஆன் லைனில் காஞ்சனா 3 படத்தைத் தேடி மொய்க்கும் கூட்டம் இன்னும் குறைந்ததாக தெரியவில்லை. இத்தனைக்கும் படம் ரிலீஸாகி 3 வாரங்களை கடந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் படங்களுக்குகூட ஆன் லைனில் இப்படி மோகம் இருந்ததில்லை என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள்.

ஆன் லைன் திருட்டை தடுத்திருந்தால், காஞ்சனா 3 படம், இதைவிட பெரிய கலெக்‌ஷனை அள்ளியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close