/tamil-ie/media/media_files/uploads/2019/04/kanchana-raghava-lawrence-akshay-kumar.jpg)
Kanchana 3, kanchana 3 full movie, Raghava Lawrence
Kanchana in Hindi: நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
லாரன்ஸுடன் வேதிகா, ஓவியா, நிக்கி தாம்போலி, தேவதர்ஷினி, கோவை சரளா, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காஞ்சனா திரைப்படத்தின் 3-ம் பாகமாகவும், முனி படத்தின் 4-ம் பாகமாகவும் இப்படம் வெளியாகியிருந்தது.
Hi dear Friends and Fans..! Shooting of Hindi remake Kanchana staring the great @akshaykumar sir has began...
need all your blessings #LaaxmiBombpic.twitter.com/BB2zZ5szAD
— Raghava Lawrence (@offl_Lawrence) April 28, 2019
இந்நிலையில், காஞ்சனா இந்தியில் இயக்கப்படுவது தான் தற்போதைய ஹாட் டாபிக்!
இதன் மூலம் ராகவா லாரன்ஸ் இயக்குநராக இந்தியில் அறிமுகமாகிறார். இதில் ஹீரோவாக அக்ஷய் குமாரும், ஹீரோயினாக கியாரா அத்வானியும் நடிக்கிறார்கள். படத்திற்கு ’லாக்ஷ்மி பாம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதனை அதிகாரப்பூர்வமாக லாரன்ஸ் தனது ட்விட்டரிலும் அறிவித்திருக்கிறார். இதன் படபிடிப்பு நேற்று துவங்கியுள்ளது.
இந்நிலையில், காஞ்சனா திரைப்படத்தில் சரத்குமார் நடித்த திருநங்கை கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.