நடிகையும், மண்டி மக்களவை எம்.பியான கங்கனா ரனாவத், வெள்ளிக்கிழமை, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) உறுப்பினர்களுக்கு வரும் அச்சுறுத்தல் காரணமாக தனது ‘எமர்ஜென்சி’ படத்துக்கான சான்றிதழ் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
இப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தனது X பக்கத்தில் வீடியோவை பதிவிட்ட கங்கனா, ‘எங்கள் எமர்ஜென்சிக்கு படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
ஆனால் இது உண்மையல்ல. உண்மையில், எங்கள் படத்திற்கு அனுமதி கிடைத்துவிட்டது, ஆனால் பல மிரட்டல்கள் வந்ததால் சான்றிதழ் நிறுத்தப்பட்டது. சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது. நாங்கள் அழுத்தத்தில் இருக்கிறோம், இந்திரா காந்தியின் படுகொலையைக் காட்டக் கூடாது, பிந்தரன்வாலேயைக் காட்டக் கூடாது, பஞ்சாப் கலவரத்தைக் காட்டக் கூடாது… பின்னர் எதைத்தான் காட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை… இதை என்னால் நம்பமுடியவில்லை, இந்த நாட்டின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது’ என்றார்.
2020-21 விவசாயிகள் போராட்டங்கள் குறித்த தனது கருத்துக்களால் பாஜகவிற்குள் சூட்டை எதிர்கொண்ட கங்கனா, டெல்லியில் உள்ள இல்லத்தில் கட்சியின் தலைவரும் மத்திய சுகாதார அமைச்சருமான ஜேபி நட்டாவை சந்தித்த ஒரு நாள் கழித்து இது வந்துள்ளது.
இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன, மேலும் அவர் தனது வரவிருக்கும் திரைப்பட பிரமொஷன் போது பொதுவில் என்ன பேசுகிறார் என்பதில் கவனமாக இருக்குமாறு அவரிடம் கூறப்பட்டது.
சில வாரங்களுக்கு முன்பு வெளியான படத்தின் டிரெய்லரில், காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவரான ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே, தனி சீக்கிய மாநிலத்திற்குப் பதிலாக இந்திராவின் அரசியல் கட்சிக்கு வாக்குகளைக் கொண்டுவருவதாக உறுதியளிப்பது போல காட்டப்பட்டுள்ளது.
படம் சீக்கியர்களை சித்தரிப்பதால், படத்தின் வெளியீட்டை நிறுத்துமாறு சிரோமணி அகாலிதளத்தின் டெல்லி பிரிவு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
படத்தின் டிரெய்லர் அகல் தக்த் மற்றும் ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி (SGPC) உள்ளிட்ட சீக்கிய அமைப்புகளிடமிருந்து கடுமையான எதிர்வினையைத் தூண்டியது.
படத்தைத் தடை செய்யக் கோரி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மற்றும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஞ்சாபின் சில பகுதிகளில் போராட்டங்களும் நடந்தன.
செவ்வாயன்று, ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டியும் "சீக்கிய சமூகம் மற்றும் வரலாற்றை தவறாக சித்தரித்ததாக" படத்தின் தயாரிப்பாளர்களுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியது. மேலும், படத்தை வெளியிட தடை கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது, என்று அதன் செயலாளர் பர்தாப் சிங் கூறினார்.
‘டிரெய்லரில் சீக்கியர்களுக்கு எதிரான காட்சிகள் சமூகத்தின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தியுள்ளது. சீக்கியர்களை பயங்கரவாதிகளாகவும் பிரிவினைவாதிகளாகவும் காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது, இது ஏற்றுக்கொள்ள முடியாதது, உண்மைக்கு அப்பாற்பட்டது’, என்று அவர் கூறினார்.
சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், படத்தை வெளியிடுவதற்கு முன் ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டியால் மறுபரிசீலனை செய்ய வேண்டும், என்று வலியுறுத்தினார்.
Read in English: Certification for my film Emergency has been stopped, censors got threats: Kangana Ranaut
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“