கங்கனாவின் புடவை 600 ரூபாய்தானாம்… அட இது ஒரு குற்றமா?

Kangana Ranaut: இந்த அளவு நல்ல ஆர்கானிக் காட்டன் இவ்வளவு குறைந்த விலைக்குக் கிடைக்கிறது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார் கங்கனா.

By: Updated: August 22, 2019, 02:13:02 PM

Kangana Ranaut: பாலிவுட்டின் திறமையான நடிகை கங்கனா ரனாவத் விதவிதமான ஃபேஷன்களை முயற்சி செய்துப் பார்ப்பதில் வல்லவர். இந்நிலையில், சமீபத்தில் கங்கனாவின் சகோதரி ரங்கோலி சாண்டல், அவரது படத்தை வெளியிட்டார். அதில் ரூ .600 மதிப்புள்ள காட்டன் சேலையை அணிந்திருந்தார் கங்கனா.

அந்தப் படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்த ரங்கோலி, ”இன்று கங்கனா ஜெய்ப்பூருக்குச் செல்கிறார். அவர் உடுத்தியிருக்கும் இந்தப் புடவை கொல்கத்தாவிலிருந்து ரூ 600-க்கு பெறப்பட்டது. இந்த அளவு நல்ல ஆர்கானிக் காட்டன் இவ்வளவு குறைந்த விலைக்குக் கிடைக்கிறது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார் கங்கனா. நம் மக்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள், ஆனால் இவ்வளவு குறைவாக சம்பாதிப்பதை நினைக்கும் போது மனம் கலங்குகிறது” என்று பதிவிட்டிருந்தார்.

விமான நிலையத்தில் வழக்கம் போல் புடவையிலும் கூட படு ஸ்டைலிஷாக தோற்றமளித்தார் கங்கனா. நம் நாட்டில் கடின உழைப்புக்கு, குறைவான ஊதியம் பெறுபவர்களின் திறமைகளை ஆதரித்ததற்காக பலர் அவரைப் பாராட்டினர். ஆனால் சிலரோ, ஹை – எண்ட் டிசைனர்கள் வடிவமைத்த கை பை, ஷூ, கோட் போன்றவற்றை அவர் அணிந்திருப்பதற்காக கங்கனாவை விமர்சித்தனர்.

கங்கனாவின் கையிலிருந்தது பிரதா ஹேண்ட் பேக், இதன் விலை பல லட்சம். அத்துடன் ஆடம்பரமான வலையில், உயர்தர டிஸைனரால் வடிவமைக்கப்பட்ட கோட்டும் அணிந்திருந்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Kangana ranaut gets troll for 600 rs saree prada handbag

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X