பிரதமர் மோடியின் கண்கள் குறித்து புகைப்படத்துடன் நடிகை கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.
உத்தர மாநில பிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் பிரான் பிரதிஷ்டா எனப்படும் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக மோடி 11 நாள் விரதத்தை தொடங்கி உள்ளார். அதன் ஒரு பகுதியாக மோடி நாடு முழுவதும் பல கோவில்களுக்கு சென்று வருகிறார்.
அந்த வகையில் நேற்று ஆந்திர மாநிலம் லெபாக்ஷி என்ற இடத்தில் உள்ள வீரபத்ர சுவாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு கோவிலில் அமர்ந்து தெலுங்கில் எழுதப்பட்ட ரங்கநாத ராமாயணத்தின் சில பாடல்களை பக்தர்கள் பாடக் கேட்டார். இந்த கோவில் ராமாயணத்துடன் தொடர்பு உடையது என்பதால் தான் பிரதமர் மோடி இங்கு வந்து தரிசனம் செய்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி வீரபத்ரசாமி கோவிலில் தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின. இந்த புகைப்படங்களை நடிகை கங்கனா ரணாவத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, அதில் பிரதமர் மோடியின் கண்கள் தெரிவித்த கருத்து கவனம் பெற்றுள்ளது.
கங்கனா ரணாவத் தனது எக்ஸ் பக்கத்தில், ”மோடிஜி நம்மில் ஒருவர் என்பதை நாம் அனைவரும் அறிந்து இருக்கிறோம். ஆனால் நம்மில் இருந்து அவரை வேறுபடுத்தி வித்தியாசமாக காட்டுவது எது? என் கருத்துபடி, அவரது நோக்கம், உணர்ச்சி மற்றும் செயலின் தீவிரத்தன்மை தான். இன்றிலிருந்து இந்தப் படத்தைப் பாருங்கள், இந்த படத்தில் அவரது கண்களை பாருங்கள். இது வெறும் தோற்றம்தான் ஆனால் சுடர்விடும் வாளைவிடக் கூர்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கிறது. வியக்க வைக்கிறது,” எனப் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“