scorecardresearch

ரயில்வே ஊழியராக மாறி டிக்கெட் கொடுத்த கங்கனா: முண்டியடித்த கூட்டம்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதில், ஜெயலலிதாவாக அவர் நடிக்கிறார். 

kangana Ranaut sells train ticket
kangana Ranaut sells train ticket

Kangana Ranaut : பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கும் பங்கா திரைப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. ஆனால் இந்தப் படத்திற்கான புரொமோஷனை மிகவும் சுவாரஸ்யமான முறையில் இப்போதே தொடங்கி விட்டார் கங்கனா. அதில் ஒரு பகுதியாக, சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினஸுக்குச் சென்று பயணிகளுக்கு டிக்கெட்டுகளை விற்றார். சுவாரஸ்யமாக, டிக்கெட்டுகளை விற்கும் படத்தில் கங்கனா அச்சு அசல் ரயில்வே ஊழியரைப் போலவே இருக்கிறார்.

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

’பங்கா’ படத்தில் ரயில்வேயில் வேலை செய்யும் கபடி வீராங்கனையாக நடித்துள்ளார் கங்கனா. அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கிறது. விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில், நீனா குப்தா, ரிச்சா சாதா, ஜாஸி கில் மற்றும் பங்கஜ் திரிபாதி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் 24 ஜனவரி 2020 அன்று திரைக்கு வருகிறது.

இதைத் தவிர, தென்னிந்திய இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் ‘தலைவி’ படத்தில் நடித்து வருகிறார் கங்கனா. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதில், ஜெயலலிதாவாக அவர் நடிக்கிறார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kangana ranaut sells train tickets panga

Best of Express