ஆங்கிலத்தில் படிக்க : Kangana Ranaut starstruck as ‘God’ Rajinikanth visits her film set in Chennai, R Madhavan calls it a ‘phenomenal beginning’. See pics
மாதவன் - கங்கனா ரனாவத் கூட்டணியில் ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னயைில் இன்று தொடங்கிய நிலையில், இந்த படத்தின் செட்டுக்க நடிகர் ரஜினிகாந்த் திடீர் விசிட் அடித்துள்ளார்.
இந்தியில் தனு வெட்ஸ் மனு படங்களில் இணைந்து நடித்து இதயங்களை வென்ற மாதவன் - கங்கனா ரனாவத் ஜோடி தற்போது மீண்டும் காட் என்ற படததில் இணைந்துள்ளது. கங்கனா நடிப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் இந்த படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் இன்று தொடங்கிய நிலையில், மங்களகரமான சூழ்நிலையைச் சேர்த்து, படப்பிடிப்பு தளத்திற்கு ரஜினிகாந்த் திடீர் விசிட் அடித்தது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இது குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள கங்கனா, “எங்கள் படப்பிடிப்பின் முதல் நாளில் எங்கள் செட்டில் தலைவரின் திடீர் வருகை எங்களைப் பரவசப்படுத்தினார். என்ன ஒரு அழகான நாள்!! இந்த நிகழ்வில் மேடி (மாதவன்) இல்லை. அவர் விரைவில் எங்களுடன் இணைவார் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இது ஒரு புதிய ஆரம்பம், நன்றி ரஜினிகாந்த் சார்.. உங்கள் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்தான் எங்களுக்கு உலகையே குறிக்கும் என்று பதிவிட்டுள்ள கங்கனா, முன்னதாக,அவர்களின் படம் அதிகாரப்பூர்வமாக இன்று தொடங்கியதாக அறிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று சென்னையில் எங்களின் புதிய திரைப்படமான சைக்கலாஜிக்கல் த்ரில்லரின் படப்பிடிப்பை தொடங்கினோம்.
படம் குறித்து மற்ற விவரங்கள் விரைவில் அறிவிப்போம். இப்போதைக்கு, இந்த அசாதாரணமான மற்றும் அற்புதமான ஸ்கிரிப்ட்டிற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் ஆசிகளும் தேவை. “அன்புள்ள விஜய் சார், தலைவியின் நம்பமுடியாத அனுபவத்திற்குப் பிறகு, மீண்டும் உங்கள் மகிமையைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் உங்கள் குழுவாக இருக்க விரும்புகிறேன், உங்கள் கட்டளைகளை ஏற்கிறேன். நன்றி என்று கங்கனா கூறியுள்ளார்.
பெயரிடப்படாத இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ள நிலையில், நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இந்தி-தமிழ் இருமொழித் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை இந்தியா முழுவதும் வெளியிடப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“