Advertisment

உடல் எடையை அதிகரித்து ஜெயலலிதாவாக மாறும் கங்கனா!

தமிழ் கற்றுக் கொள்வதற்காக புரபஷனல் மொழி பயிற்றுவிப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளாராம். 

author-image
WebDesk
Jun 04, 2019 21:01 IST
Kangana ranaut combat workout video

இயக்குநர் ஏ.எல்.விஜய் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கிக் கொண்டிருக்கிறார்.

Advertisment

’தலைவி’ எனப் பெயரிடப் பட்டுள்ள இந்தப் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். சசிகலா வேடத்தில் சாய் பல்லவி நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும் இதை இன்னும் படக்குழுவினர் உறுதிப் படுத்தவில்லை.

வைப்ரி மீடியாஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு விஜய்யும், விஜயேந்திர பிரசாத்தும் கதை எழுதுகிறார்கள். படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ்.

இந்நிலையில் சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில், தலைவி படத்திற்காக, கங்கனா உடல் எடையை அதிகரிப்பதாக தெரிவித்திருக்கிறார் விஜய். அதோடு தமிழ் கற்றுக் கொள்வதற்காக புரபஷனல் மொழி பயிற்றுவிப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளாராம்.

டீன் ஏஜ் முதல் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் விஜய், இந்த ஆணாதிக்க சமூகத்தில் ஒரு கட்சியின் தலைவராக அவர் எப்படி உயர்ந்தார் என்பதை காட்சிப் படுத்துகிறாராம்.

தவிர, இந்தப் படத்தில் கங்கனாவுக்கு மேக்கப் போடுவதற்காக, வெளிநாட்டு மேக்கப் ஆர்டிஸ்டும் நியமிக்கப்பட்டுள்ளாராம்.

#Al Vijay #Kangana Ranaut #Jayalalithaa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment