scorecardresearch

தலைவியின் சில காட்சிகளுக்காக 20 கிலோ வரை எடையை அதிகரித்த கங்கனா!

வாக்கிங், ஜாகிங், யோகா மூலம் மீண்டும் ஃபிட்டாக மாற வேண்டுமாம்… இன்ஸ்டாவில் புகைப்படம் பதிவிட்ட ”ரீல்” தலைவி

kangana ranaut workout, kangana ranaut thalaivi weight gain, kangana ranaut yoga, king dancer pose, king dancer pose benefits

Kangana reveals she gained 20 kg for Thalaivi : ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கிறார் நடிகை கங்கனா ரனாவத். இப்படத்தின் காட்சிகள், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தற்போது காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இப்படத்திற்காக 20 கிலோ வரை எடையை அதிகரித்ததாக கூறியுள்ளார் கங்கனா.

தற்போது அந்த படத்தின் குறிப்பிட்ட காட்சிகள் முடிவடைய இருப்பதாக கூறிய அவர், மீண்டும் பழைய எடையை பெற தொடர்ந்து யோகா போன்ற இதர உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.  இது தொடர்பாக வெளியிட்டுள்ள இன்ஸ்டகிராம் போஸ்ட்டில் கிங் டான்ஸர் போஸ் என்று கூறப்படும் நடராஜாசனம் ஆசனத்தை மேற்கொண்டு வருகிறார். ஒற்றைக்காலில் சமநிலை பின்னோக்கி வளைந்து கொடுக்கும் ஆசனம் இதுவாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kangana reveals she gained 20 kg for thalaivi

Best of Express