Advertisment
Presenting Partner
Desktop GIF

ரூ20 கோடி செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது; ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

உயர்நீதிமன்ற சொத்தாட்சியரிடம் நவம்பர் 13-ம் தேதிக்குள் ரூ. 20 கோடியை செலுத்தாமல் ‘கங்குவா' படத்தை வெளியிடக் கூடாது என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai HC Kanguva

உயர்நீதிமன்ற சொத்தாட்சியரிடம் நவம்பர் 13-ம் தேதிக்குள் ரூ. 20 கோடியை செலுத்தாமல் ‘கங்குவா' படத்தை வெளியிடக் கூடாது என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற சொத்தாட்சியரிடம் நவம்பர் 13-ம் தேதிக்குள் ரூ. 20 கோடியை செலுத்தாமல் ‘கங்குவா' படத்தை வெளியிடக் கூடாது என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை சேர்ந்த அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல வி.ஐ.பி.க்கள் பணம் தைக் கொடுத்து வைத்துள்ளனர். இவர், அந்த பணத்தை பலருக்கு கடனாக கொடுத்துள்ளார். இதில் நிதி இழப்பு ஏற்பட்டதால் அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். பின்னர், அவர் மரணம் அடைந்தார்.

உயிரிழந்த அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் சொத்துக்களைச் சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் இடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து அந்த தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். 

அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் இடம், ஸ்டூடியோ கிரீன் பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் கடந்த 2013-ம் ஆண்டு 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.

இந்த தொகையை வட்டியுடன் திருப்பி கேட்டு சொத்தாட்சியர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை ஞானவேல்ராஜாவும், ஈஸ்வரனும் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை.

இதையடுத்து, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்களாக அறிவிக்கக் கோரியும், ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் படங்களை முடக்கக் கோரியும் சொத்தாட்சியர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கங்குவா படத்தை வெளியிடும்முன் 1 கோடி ரூபாயை சொத்தாச்சியரிடம் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகேயன் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை (நவம்பர் 11) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 1 கோடி ரூபாயை இன்னும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செலுத்தவில்லை என சொத்தாட்சியர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் செலுத்த வேண்டிய தொகையை செலுத்துவதற்கு பணம் இல்லை என தெரிவிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் 100 கோடி ரூபாயைத் திரும்ப செலுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ரூ. 20 கோடியை நவம்பர் 13-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பணத்தை செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment