/tamil-ie/media/media_files/uploads/2022/10/Kaniha.jpg)
40 வயதிலும் இவ்ளோ அழகா? சீரியல் நடிகை கனிகா லேட்டஸ்ட் கிளிக்ஸ்
கனிகாவின் இளமையான கவர்ச்சியான புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் 40 வயதில் இவ்ளோ அழகா என்று வியப்பை வெளியிப்படுத்தி வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Kaniha.jpg)
Advertisment
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாக்களில் நடிகையாக வலம் வரும் கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் 40 வயதிலும் இவ்ளோ அழகா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நடிகை கனிகா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாக்களில் நடித்துள்ளார். சினிமாக்களில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து வருகிறார். கனிகா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கனிகா முதல் படமான ஃபைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். காட்ஃபாதரின் வரலாறு - காயத்ரி மற்றும் ஆட்டோகிராப்பில் தேன்மொழி ஆகியவை இவர் நடித்ததில் பிரபலமான கதாபாத்திரங்கள் ஆகும்.
திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட கனிகா மதுரையில் பிறந்தவர். மதுரையில் பிரபலமான பள்ளியொன்றில் படித்த கனிகா, மாநில அளவிலான கல்விக்கான விருதினைப் பெற்றுள்ளார். பின்னர், இராஜஸ்தானில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்னுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் பயின்றார். சிறு வயதிலிருந்தே நன்றாகப் பாடும் திறன் கொண்ட கனிகா, பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியே இவர் திரைத்துறைக்கு வரக் காரணமாக இருந்தது.
நடிகை கனிகா ஃபைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்படங்களைவிட மலையாளத்தில் அதிகம் நடித்துள்ளார். பாக்யதேவத, பழசி ராஜா மற்றும் ஸ்பிரிட் ஆகிய படங்கள் கனிகா நடித்து பெரிய ஹிட் படங்கள் ஆகும்.
கனிகாவின் இனிமையான குரலால் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார். கதாநாயகிகளுக்கு, பின்னனி குரலும் கொடுத்தார்.
இவர் தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர், குறள் மற்றும் கோப்ரா என தொடர்ந்து தமிழ் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
40 வயதாகும் கனிகா, இப்போதும் இன்னும் இளமையாகத் தோற்றமளிக்கிறார். கனிகா லேட்டஸ்ட்டாக எடுத்த தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கனிகாவின் இளமையான கவர்ச்சியான புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் 40 வயதில் இவ்ளோ அழகா என்று வியப்பை வெளியிப்படுத்தி வருகின்றனர். நடிகை கனிகாவின் அழகான ஹாட்டான புகைப்படங்கள் இன்ஸ்டகிராமில் செம வைரலாகி வருகிறது.
நடிகை கனிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 946k ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக், கம்மெண்ட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.