பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமடைந்த அகிலன் இன்று தனக்கு திருமணம் முடிந்து விட்டது என்று திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ள நிலையில், அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த கண்மணி மனோகரன் காட்டமான கமெண்ட்டை பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சீரியல் பாரதி கண்ணம்மா. இதன் வெற்றியின் காரணமாக தற்போது இரண்டாம் பாகம் ஒளிப்பரப்பாகியது. இந்த சீரியல் பாரதியின் தம்பியாக முதலில் நடித்தவர் அகிலன். இவர் பல்வேறு சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/869bba23-63b.jpg)
இந்நிலையில் நடிகர் அகிலன் தற்போது தனது காதலியான அட்சயா முரளிதரனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அகிலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இதனையடுத்து பரீனா, அருண் உள்ளிட்ட சீரியல் நடிகர்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/5867c27e-300.jpg)
இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலனுக்கு ஜோடியாக அஞ்சலி கேரக்டரில் நடித்து வந்த கண்மணி மனோகரன், "இதுக்கு முன்னாடி எத்தனை பேரை சீட் பண்ணுன அதையும் மென்ஷன் பண்ண வேண்டியதுதானே? கொஞ்சம் கூட வெட்கம் இல்லல்ல" என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார். இது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/4dbc1b64-a5b.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“