Kanmani Serial: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி சீரியல், சின்னத்திரை விரும்பிகளின் ஹிட் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.
Advertisment
என்ன தான் பொறுமையே முதன்மை என்றிருந்தாலும், ஒரு கட்டத்திற்குப் பிறகு எமோஷனலை அடக்குவது எளிதல்ல. இதற்கு யாரும் விதி விலக்கு இல்லை. அந்த வகையில் கண்மணி சீரியலில், ”சின்னவரே சின்னவரே” என்று அந்த ஊர் மக்களே அழைக்கும் கண்ணன் அண்மை காலமாக பொங்கி எழுகிறார். திருமதி செல்வம் சீரியலில் சஞ்சீவ் நடித்த செல்வம் கதாபாத்திரத்திற்குப் பிறகு, இந்த கண்ணன் எனும் சின்னவர் கதாபாத்திரம் நன்றாக பொருந்தியிருக்கிறது அவருக்கு.
அக்காவுடன் பின் வாசல் வழியாக வந்தவன், ஒண்ட வந்த பிடாரி என்றெல்லாம் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் கண்ணனைத் திட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதுவரை மாமாவுக்காக தன் கோபத்தை எல்லாம் கட்டுப் படுத்திவைத்திருந்த கண்ணன், அவன் மாமா இறந்ததும் அப்படியே மாறிப் போகிறான். இருப்பினும் கண்ணன் இருக்கும் தைரியத்தில் அவன் அக்காவும், அவரது பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
ஜோலார்பேட்டை குடிநீர் ரயிலுக்கு டாட்டா... மழை அளவு அதிகரித்ததால் சேவை நிறுத்தம்..
சஞ்சீவ் வேகமாக பேசக் கூடியவர் என்பது ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியைப் பார்த்த அனைவருக்குமே தெரியும். அந்த வகையில், கண்மணி சீரியலில், தனக்கு பாலில் விஷத்தை கொடுத்தது யார் என்று தெரிந்துகொண்டு, குமரேசனை மிரட்டும் காட்சிகளில் அருமையாக நடித்து இருக்கிறார். குறிப்பாக அரை பக்க டயலாக்கை கோபத்தோடு, கொஞ்சமும் பிசகாமல் ஒரே ஷாட்டில் பேசி முடித்திருப்பது அருமை.