Advertisment

மாரடைப்பு... திருமணம் ஆகாத 39 வயது பிரபல நடிகர் திடீர் மரணம்: சோகத்தில் சினிமா உலகம்

பிரபல கன்னட நடிகர் நிதின் கோபி மரணம்; 39 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்; திரைத்துறையினர் இரங்கல்

author-image
WebDesk
Jun 04, 2023 16:55 IST
Nithin Gopi

கன்னட நடிகர் நிதின் கோபி

கன்னட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த கன்னட நடிகர் நிதின் கோபி மரணமடைந்ததாக குடும்ப வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

Advertisment

39 வயதான நடிகர் நிதின் கோபி தனது பெற்றோருடன் தனது இட்டமடு இல்லத்தில் தங்கியிருந்தார். வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நிதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நிதின் கோபியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், அவரை காப்பாற்ற முடியவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்: ஏழை ரசிகர்களை அனுமதிக்கவில்லை : ரஜினிகாந்தை பார்க்க வந்த ரசிகர் ஏமாற்றம்

ஹலோ டாடி தவிர, கேரள கேசரி, முத்தினந்த ஹெந்தாதி, நிஷ்ஷப்தா மற்றும் சிரபாந்தவ்யா போன்ற படங்களில் நிதின் கோபி நடித்துள்ளார்.

குழந்தை நடிகராக, நிதின் கோபி சாகச சிம்ஹாவில் நடித்தார், அதில் பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். புனர்விவாஹா என்ற பிரபலமான தொடரிலும் நிதின் கோபி நடித்துள்ளார். நிதின் கோபி சில தமிழ் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment