Advertisment

நான் அதிஷ்டசாலியாக உணர்ந்த தருணம்: விக்ரம்- காந்தாரா நாயகன் சந்திப்பு: போட்டோஸ் வைரல்!

காந்தாரா படத்தின் மூலம் இந்தியாவின் சிறிய கிராமங்களில் கூட தனது முத்திரையை பதித்த பிரபல கன்னட நடிகராக ரிஷப் ஷெட்டி தற்போது விக்ரமை சந்தித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Chiyaan Vikram Rishabh shetty

விக்ரம் - ரிஷப் ஷெட்டி

காந்தாரா படத்தின் மூலம் இந்திய அளவில் நடிகராகவும் இயக்குனராகவும் முத்திரை பதித்த பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி தான் நடிகன் ஆவதற்கு முக்கிய இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் சியான் விக்ரம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில், நடிப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் சியான் விக்ரம். ஆரம்பத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த இவர், 1999-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான சேது படத்தின் மூலம் மீண்டு வந்தார். அதன்பிறகு, தில், தூள், சாமி, அந்நியன், ஐ, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த விக்ரம் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருகிறார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் விக்ரம் ஈடுபட்டுள்ளார். கர்நாடகாவின் கே.ஜி.எஃப் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள தங்கலான் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றிருந்தனர்.

இதனிடையே காந்தாரா படத்தின் மூலம் இந்தியாவின் சிறிய கிராமங்களில் கூட தனது முத்திரையை பதித்த பிரபல கன்னட நடிகராக ரிஷப் ஷெட்டி தற்போது விக்ரமை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரிஷப் ஷெட்டி, ஒரு நடிகனாக மாறுவதற்கான எனது பயணத்தில், எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் சியான் விக்ரம். 24 வருட காத்திருப்புக்கு பிறகு இன்று அவரை சந்தித்திருக்கிறேன்.

இந்த சந்திப்பு என்னை அதிஷ்டசாலியாக உணர வைக்கிறது. என்னைப்போன்ற நடிகர்களை ஊக்கப்படுத்தியதற்காக மிக்க நன்றி. வரவிருக்கும் அவரின் தங்கலான் படத்திற்கு எனது வாழ்த்துக்கள். உங்களை மிகவும் நேசிக்கிறேன் விக்ரம் சார் என்று பதிவிட்டுள்ளார். ரிஷப் ஷெட்டியின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema Dhruv Vikram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment