Advertisment

இளம் சீரியல் நடிகை தற்கொலை ஏன்? 4 பக்க கடிதம் சிக்கியது

Kannada Actress Soujanya Suicide Note found Tamil News அந்த கடிதத்தில் செப்டம்பர் 27, 28, 30 ஆகிய மூன்று தேதிகள் எழுதப்பட்டு இருந்தன.

author-image
WebDesk
Oct 01, 2021 16:38 IST
New Update
Kannada Actress Soujanya Suicide Note found Tamil News

Kannada Actress Soujanya Suicide Note found Tamil News

Kannada Actress Soujanya Suicide Note found Tamil News : திரைத்துறையில் தற்கொலைகள் என்பது அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. அதிலும் சின்னதிரை நடிகர், நடிகைகள்தான் அதிகம் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது கன்னட சின்னதுரை நடிகை சௌஜன்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisment

பிரபல கன்னட சீரியல் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் நடிகை சௌஜன்யா. பெங்களூருக்கு அருகே உள்ள கும்பல்கோடு என்ற பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த இவர், திடீரென இன்று காலை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்தத் தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை உடைத்து சௌஜன்யாவின் உடலை மீட்டனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, சௌஜன்யா ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எழுதிய நான்கு பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், திரைத்துறை தற்போது இருக்கும் சூழல் காரணமாகத் தான் நிம்மதியற்று இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், கடந்த பல நாட்களாகவே தான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதனால் தற்கொலை எனும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இதுதவிர வேறு எந்தவித காரணமும் இல்லை மற்றும் யாரும் காரணம் இல்லை என்றும் எழுதியிருக்கிறார்.

மேலும், தன்னை மன்னிக்குமாறு அவருடைய பெற்றோரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார் சௌஜன்யா. அதுமட்டுமின்றி, அந்த கடிதத்தில் செப்டம்பர் 27, 28, 30 ஆகிய மூன்று தேதிகள் எழுதப்பட்டு இருந்தன. இதனால், அவர் மூன்று நாட்களுக்கு முன்பிலிருந்தே தற்கொலை செய்வதற்கான முடிவை எடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. தற்போது இந்தத் தற்கொலை சம்பந்தமாக சௌஜன்யாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Suicide
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment