நடிகை மேக்னா ராஜ் கணவர் திடீர் மரணம்: 39 வயதில் மாரடைப்பு
கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சார்ஜா இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 39. சீரஞ்சீவி சார்ஜா மறைவுக்கு நடிகை பிரியாமனி, நடிகர் அல்லு சிரீஷ், கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சார்ஜா இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 39. சீரஞ்சீவி சார்ஜா மறைவுக்கு நடிகை பிரியாமனி, நடிகர் அல்லு சிரீஷ், கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
kannada cinema actor Chiranjeevi Sarja Passes Away, கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா காலமானார், நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மரணம், நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மறைவு, actor Chiranjeevi Sarja Passes Away at 39, actor Chiranjeevi Sarja no more, actor Chiranjeevi Sarja, latest ciema news, latest cinema news in tamil
கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சார்ஜா இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 39. இவர் நடிகை மேக்னா ராஜ் கணவர் ஆவார். சீரஞ்சீவி சார்ஜா மறைவுக்கு நடிகை பிரியாமனி, நடிகர் அல்லு சிரீஷ், கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Advertisment
கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சார்ஜா இன்று மதியம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சு பேச்சு இல்லாத நிலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். கன்னட நடிகர் சீரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால உயிரிழந்தது கன்ன திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் சிரஞ்சீவி சார்ஜா தமிழ் நடிகை மேக்னாவின் கணவர். மேலும், சீரஞ்சீவி சார்ஜா நடிகரும் இயக்குனருமான அர்ஜூன் சார்ஜாவின் உறவினர்.
பெங்களூருவில் பிறந்த சிரஞ்சீவி சார்ஜா தொடக்கத்தில் சினிமா வியாபாரத்தில் இருந்தார். பின்னர், அவருடைய மாமா அர்ஜூன் சார்ஜா படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தார். பின்னர், 2009-ம் ஆண்டு வாயுபுத்ரா என்றா படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்தப் படம் அர்ஜூன் சார்ஜாவின் சகோதரர் கிஷோர் சார்ஜாவால் இயக்கப்பட்டது.
Advertisment
Advertisements
Deeply saddened and shocked to hear the passing away of #ChiranjeeviSarja. A young talent gone too soon. Condolences to his family and friends.
சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். “சிரஞ்சீவி சார்ஜா காலமானதைக் கேட்டு ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். ஒரு இளம் திறமையான நடிகர் விரைவாக போவிட்டார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.
சிரஞ்சீவி சார்ஜா இளம் வயதிலேயே மறைந்த செய்தியைக் கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Shocked to hear about #chiranjeevisarja ‘s demise!!! Can never forget his smiling face????????????my deepest condolences to the whole family !!
சிரஞ்சீ சார்ஜா மறைவு செய்தியை அறிந்த நடிகை பிரியாமணி ராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரியாமணி தனது டுவிட்டர் பக்கத்தில், “சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவைப் பற்றி கேள்விப்பட்டேன். அவரது சிரித்த முகத்தை ஒருபோதும் மறக்க முடியாது. இதயம் உடைந்துவிட்டது. அவரது குடும்பத்திற்கு எனது இதயபூர்வமனா ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.
Shocked at the sudden demise of Kannada actor Chiranjeevi Sarja. He's just 39 years old. My condolences to the Sarja family. Rest in peace, Chiru. ???????? pic.twitter.com/2AtVto9Y8w
நடிகர் அல்லு சிரீஷ் எழுதினார், சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மறைவு அதிர்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். அல்லு சிரீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், “கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் தீடீர் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு வெறும் 39 வயதுதான். சர்ஜா குடும்பத்திற்கு எனது இரங்கல். அவருடைய ஆத்மா அமைதியடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"