கவியரசர் கண்ணதாசனுக்கும் நடிகை தேவிகாவுக்கும் இடையிலான ஆத்மார்த்தமான அண்ணன் – தங்கை உறவை பற்றி இப்போது பார்ப்போம்.
Advertisment
கவியரசர் கண்ணதாசனுக்கும் நடிகை தேவிகாவுக்கும் இடையிலான உறவை விளரி யூடியூப் சேனலில் ஆலங்குடி வெள்ளைச்சாமி விளக்கியுள்ளார். அந்த வீடியோவில், கவியரசர் கண்ணதாசன் 3 நடிகைகளை பற்றி உயர்வாக எழுதியிருப்பார். அவர்கள் டி.ஆர்.ராஜகுமாரி, மனோரமா, தேவிகா. ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட தேவிகா, நிறைய தமிழ் படங்களில் நடித்துள்ளார். கண்ணதாசன் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தவர். கண்ணதாசனும் அப்படியே. கண்ணதாசனின் சொந்தப் படங்களில் பெரும்பாலும் தேவிகா தான் ஹீரோயின்.
கண்ணதாசன் தயாரிப்பில் எடுக்கப்பட்ட படம் தாயே உனக்காக, இதில் சிவாஜி, பத்மினி, தேவிகா, முத்துராமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தேவிகாவுக்கு கிறிஸ்தவப் பெண் வேடம். தேவிகாவுக்கு கண்ணதாசன் காட்ஃபாதர் போல் இருந்ததாக தேவிகா கூறியுள்ளார். அதற்கு சான்று இந்தச் சம்பவம்.
ஒருமுறை கண்ணதாசன் ஒரு இயக்குனரை நல்ல திட்டிட்டேன் என தேவிகாவிடம் சொல்லியிருக்கிறார். தேவிகா ஏன் என்று கேட்க, உன்னை தப்பா பேசினான் அதான் திட்டிட்டேன் என்றிருக்கிறார்.
பின்னர் ஏன் தேவிகாவையே ஹீரோயின் ஆக்குகிறீர்கள் என கண்ணதாசனிடம் கேட்டப்போது, அவர் ஒருபோதும் என்னிடம் சம்பளம் எவ்வளவு என்று கேட்டதில்லை என்றிருக்கிறார். மேலும் நான் சோகமாக இருக்கும்போது என்னைத் தேற்றும் கரிசனம் உள்ள தங்கை என்றும் கூறியிருக்கிறார்.
ஆனந்த ஜோதி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரும் தேவிகாவும் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் மெல்லிசை மன்னர்கள் இசையில் இடம்பெற்ற பாடல் தான் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே. இந்தப் பாடலை வைத்துதான் தேவிகா கவிஞர் கண்ணதாசனை கிண்டல் செய்வார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“