கண்ணதாசன் பாடல் வரிகளை புரியாமல் தவித்த இயக்குனருக்கு கவிஞர் அருமையான விளக்கம் கொடுத்த பாடல் எது என்பது இப்போது பார்ப்போம்.
Advertisment
இதுதொடர்பாக, விளரி யூடியூப் சேனலில் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்திருப்பதாவது; இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் வெளிவந்த படம் பாத காணிக்கை. இந்தப் படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி, எம்.ஆர் ராதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருப்பார்.
இந்தநிலையில், ஒரு பாடலுக்கான சூழ்நிலையை கவிஞரிடம் இயக்குனர் கூறுகிறார். அதாவது ஜெமினி கணேசனும் சாவித்திரியும் காதலிக்கிறார்கள், ஆனால் வீட்டின் கட்டாயத்தால் ஜெமினி கணேசன், விஜயகுமாரியை திருமணம் செய்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார். அந்தச் சூழலில் சாவித்திரி பாடலாக சிச்சுவேசன் கூறப்பட்டது.
உடனே கண்ணதாசன், எட்டடுக்கு மாளிகையில் என்ற பாடலை எழுதிக்கொடுக்கிறார். இயக்குனருக்கு சந்தேகம் இருந்தாலும், எதுவும் கேட்காமல் ஏற்றுகொள்கிறார். பாடகி சுசீலா குரலில் பாடல் வெளியாகி செம ஹிட் அடித்தது.
பின்னர் படத்தின் வெள்ளி விழாவின்போது இயக்குனர் சங்கர், கண்ணதாசனிடம் எட்டடுக்கு மாளிகை குறித்த சந்தேகத்தை கேட்கிறார். அதாவது ஜெமினி கணேசன் கதைப்படி சற்று வசதியானவர் என்றாலும், எட்டடுக்கு மாளிகை என்பது பொருத்தமில்லாமல் இருக்கிறது என்கிறார். இதற்கு பஞ்சு அருணாசலத்தை பதில் சொல்ல சொல்கிறார் கண்ணதாசன். அவரோ பாட்டு ஹிட் ஆகிடுச்சு, இனி என்ன என்கிறார்.
உடனே சங்கர், கண்ணதாசன் பக்கம் திரும்ப, அவர் எட்டடுக்கு மாளிகையில் என்றால், தலையில் வைத்து கொண்டாடியது என கூறுகிறார். இயக்குனர் புரியாமல் மீண்டும் பார்க்க, ஒரு மனிதன் தன் கைகளின் 8 ஜான் அளவுக்கு இருப்பான். காலிலிருந்து கணக்கிட்டால் தலை 8 ஜான் அளவில் வரும். அதனால் தான் அப்படி எழுதினேன் என்கிறார். அப்போது தான் இயக்குனருக்கு தெளிவு கிடைத்தது. இந்த தத்தவத்தை விளக்கும் முருகன் பாடலும் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“