நாகேஷ் கூறிய விஷயங்களை வைத்தே 10 நிமிடங்களில் கண்ணதாசன் ஒரு சூப்பர் ஹிட் பாடலை எழுதினார். பாடல் எப்படி எழுதப்பட்டது என்பது குறித்த சுவாரஸ்ய தகவலை இப்போது பார்ப்போம்.
1960களில் காமெடி வேடத்தில் அறிமுகமானவர் நாகேஷ். பின்னர் ஹீரோ, குணச்சித்தர கதாப்பாத்திரம், வில்லன் என ஒரு ரவுண்ட் வந்தார். தனது அசாத்திய நடிப்பாலும், காமெடி திறமையாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நாகேஷ்.
நாகேஷ் நடிப்பில் 1967ல் வெளியான படம் ’அனுபவி ராஜா அனுபவி’. இந்தப் படத்தை இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்திருப்பார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கும் போது, கவிஞர் கண்ணதாசன் ஒருநாள் படபிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். இதைப் பார்த்த என்ன கவிஞரே இந்தப் பக்கம் எனக் கேட்டுள்ளார். அதற்கு கண்ணதாசன் உன்னுடைய படத்திற்கு பாட்டு எழுத தான் வந்துள்ளேன். என்ன எழுதலாம் என சொல்லு, உனக்கு சென்னையைப் பத்தி என்ன தோணுதோ சொல்லு என்று நாகேஷிடம் கேட்டிருக்கிறார்.
இங்க எங்கய்யா தமிழ் பேச ஆள் இருக்காங்க என்று கூறி தனக்கு தோன்றிய விஷயங்களை கண்ணதாசனிடம் கொட்டியுள்ளார் நாகேஷ். இந்த வார்த்தைகளை அப்படியே பிடித்துக் கொண்ட கண்ணதாசன் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்ற பாடலை எழுதினார். இப்படியாக வெறும் 10 நிமிடங்களிலே இந்த ஹிட் பாடல் எழுதி முடிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“