Advertisment

இரிட்டேட் செய்யும் ஹீரோ… கண்ணான கண்னே சீரியல் நிமிஷிகா ஓப்பன் டாக்

Kannana kanney serial hero irritates heroine nimishika : நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆஷிக், நிமிஷிகாவிடம் படப்பிடிப்பில் உங்களை அதிகம் எரிச்சலடைய செய்யும் நபர் யார் என கேட்டார். அதற்கு நிமிஷிகா சற்றும் யோசிக்காமல் ராகுல் என்றார். யார் அவர் என ஆஷிக் கேட்க தனது சீரியல் ஹீரோ என பதிலளித்தார் நிமிஷிகா.

author-image
WebDesk
Jun 05, 2021 22:45 IST
இரிட்டேட் செய்யும் ஹீரோ… கண்ணான கண்னே சீரியல் நிமிஷிகா ஓப்பன் டாக்

சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் கண்ணான கண்னே. இது தெலுங்கில் வெளிவந்த பௌர்ணமி சீரியலின் தமிழ் பதிப்பாகும். இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர்  நிமிஷிகா. பப்லு பிரித்திவிராஜ் மற்றும் ராகுல் ரவி முன்னனி கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Advertisment

நிமிஷிகா முதலில் விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்தார். தற்போது கண்ணான கண்னே சீரியலில் நடித்து வருகிறார். பொதுவாகவே சீரியல் நடிகைகளுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.



நிமிஷிகா கண்ணான கண்னே சீரியலில் ஹோம்லியாக  நடித்து வந்தாலும், சில வாரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் மார்டன் உடைகளில் கவர்ச்சியாக எடுக்கபட்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதை பார்த்து ரசிகர்கள் நிமிஷிகாவா இது என ஆச்சர்யம் அடைந்தனர்.



தற்போது கொரோனா ஊரடங்கு நேரத்தில் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதற்கு அவரது ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.



இந்நிலையில் நிமிஷிகா சன் மியூசிக்கில் சாட் வித் ஆஷிக் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆஷிக், நிமிஷிகாவிடம் படப்பிடிப்பில் உங்களை அதிகம் எரிச்சலடைய செய்யும் நபர் யார் என கேட்டார். அதற்கு நிமிஷிகா சற்றும் யோசிக்காமல் ராகுல் என்றார். யார் அவர் என ஆஷிக் கேட்க தனது சீரியல் ஹீரோ என பதிலளித்தார் நிமிஷிகா.

ஆச்சரியமடைந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆஷிக், என்னங்க இப்படி ஓப்பனா சொல்லிட்டிங்க, அப்படி என்ன உங்களுக்கு தொந்தரவு கொடுத்தார் என கேட்டதற்கு, எப்போதும் நோண்டிக்கிட்டே, அடிச்சிக்கிட்டே இருப்பார் என கூறினார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Kannana Kanne Serial #Sun Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment