காணாமல் போன ஹார்ட் டிஸ்க்? இது என்னடா பிரபாஸுக்கு வந்த சோதனை! கண்ணப்பா படத்துக்கு புதிய சிக்கல்!

விஷ்ணு மஞ்சு, அக்சய்குமார், மோகன்லால், பிரபாஸ் என பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள "கண்ணப்பா" படத்தின் முக்கிய VKX காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிரைவ் காணாமல் போனதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷ்ணு மஞ்சு, அக்சய்குமார், மோகன்லால், பிரபாஸ் என பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள "கண்ணப்பா" படத்தின் முக்கிய VKX காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிரைவ் காணாமல் போனதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kannappa hard drive

காணாமல் போன ஹார்ட் ட்ரைவ்? கண்ணப்பா படத்துக்கு வந்த சிக்கல்!

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. இப்படத்தில் இந்திய திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்களான மது, சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர். இவர்களோடு மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.

Advertisment

திரைப்படம் ஜூன் மாதம் 27-ம் தேதி தமிழ்,தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் முக்கியமான கிராபிக்ஸ் காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிரைவ் திருடப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள ஹைவ் ஸ்டூடியோஸில் இருந்து ஹார்ட் டிரைவை கொரியர் மூலமாக ஃபோர் பிரேம்ஸ் ஸ்டூடியோவிற்கு கொரியர் அனுப்பி வைத்துள்ளனர். அந்த கொரியரை வாங்கியது ரகு. ஆனால் ரகு அந்த பார்சலை சரிதா என்ற பெண்ணிடம் கொடுத்தாக கூறுகிறார். தற்பொழுது அந்த 2 நபர்களும் காணவில்லை. இதனால், படக்குழு ஐதரபாத் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதுயாரோ வேண்டும் என்றே படத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்ததுபோல் இருக்கிறது என புகாரளித்துள்ளனர். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. போலீசார் தீவிர விசாரணையில் ஈட்டுப்பட்டு வருகின்றனர்.

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: