ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலில் இருந்து விலகிய நடிகை மனிஷா அஜித் சம்பள பாக்கி. செட்டில் பாதுகாப்பு இல்லை என்று அடுக்கடுக்கான பல புகார்களை தெரிவித்துள்ளார்.
முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்புவதில் முக்கியத்துவம் அளித்து வரும் ஜீ தமிழில் பல புதிய சீரியல்கள் களமிறங்கி வரும் பழைய சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 100-வது எபிசோட்டை கடந்த கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீரியல்ல ஆதிர என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை மனிஷாஅஜித் தற்போது திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவரின் விலகல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஆழ்த்தியுள்ள நிலையில், இந்த முடிவு குறித்து தற்போது நடிகை மனிஷாஅஜித் விளக்கம் அளித்துள்ளார்.
இதில், கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் தொடங்கியதில் இருந்து சம்பளம் பெரிய பிரச்சினையாக இருந்தது. பாதி சம்பளம் மட்டுமே கிடைத்தது. கொரோனா காலகட்டத்தில் லீவு எடுக்காமல் நடித்து கொடுத்தாலும் முழு சம்பளம் கிடைக்கவில்லை. தயாரிப்பாளரிடம் கேட்டபோது தற்போது பணம் இல்லை என்று கூறினார். அதன்பிறகு பாதி சம்பளம் கொடுங்கள் மீதியை அப்புறம் கொடுங்கள் என்று சொன்னேன்.
ஆனால் அதன்பிறகு மீதி தொகையை கேட்கும்போதெல்லாம் தரேன் தரேன் என்றுதான் சொல்லி வந்தார். இதுவரை சம்பளம் கிடைக்கவில்லை. கேட்டால் மாற்றி மாற்றி ஏதோ காரணம் சொல்லி இழுத்தடிக்கிறார். இதுவரை அவரிடம் 6 லட்ச ரூபாய் சம்பளம் பாக்கி உள்ளது. இது மட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பே இல்லாத ஒரு நிலைதான் உள்ளது.
ஷாக் அடிக்கும், விபத்து நடக்கும், அப்போகூட நடித்து கொடுக்க வேண்டும் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு படப்பிடிப்பு நிறைவடையும் என்று சொல்வார்கள் ஆனால் 11 மணி வரை ஷூட்டிங் நடக்கும். இதுபற்றி யார் கேட்டாலும் பதிலே சொல்ல மாட்டார்கள் என்று அடுக்கடுக்கான பல புகார்களை தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“