/tamil-ie/media/media_files/uploads/2019/02/a673.jpg)
Kanne Kalaimane in Tamilrockers, Tamilrockers Leaked Kanne Kalaimane Movie
Tamilrockers Leaked Kanne Kalaimane Full Movie Online: சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'கண்ணே கலைமானே' திரைப்படம் இந்த வாரம் வெளியானது.
படத்திற்கு ஓரளவிற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. நிமிர் படத்திற்கு பிறகு உதயநிதியின் நடிப்பிற்கு மீண்டும் பாராட்டுகளை இப்படம் கொடுத்திருக்கிறது. அதற்கு இயக்குனர் சீனுவுக்கே அவர் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை இப்படத்தை பலவீனமாக்குகிறது என்பதே ரசிகர்களின் பரவலான கருத்தாக உள்ளது.
ஆடியன்ஸுக்கும், படத்திற்குமான கனெக்டிங் குறைவாக இருப்பதால், சுமாரான விமர்சனம் கிடைத்தாலும், வாழ்வியலை மையப்படுத்தியே எப்போதும் படமெடுக்கும் சீனு ராமசாமியின் படைப்பிற்கு என ஃபேமிலி ஆடியன்ஸ் இருப்பதால், வார இறுதியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வழக்கம் போல் இந்தப் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத் தனமாக வெளியிட்டுள்ளது. இந்த வாரம் வெளியான ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ், தற்போது கண்ணே கலைமானே படத்தையும் வெளியிட்டிருக்கிறது.
சமீபத்தில் முதல்வரை நேரில் சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், 'அரசாங்கத்தின் உதவி இல்லாமல் இந்த தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க முடியாது' என்று தெரிவித்தது எப்போது நிஜமாகப் போகிறது என்று தெரியவில்லை.
இப்படத்தின் நாயகன், தயாரிப்பாளர் என இரண்டுமே உதயநிதி ஸ்டாலின் தான் என்பதால், 'கண்ணே கலைமானே' திரைப்படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸை ஒழிப்பதில் அவராவது ஏதும் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.