உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் கண்ணே கலைமானே படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி இணையத்தில் வெளியாகி வருகிறது.
Advertisment
விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை படத்தை இயக்கிய சீனு ராமசாமி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை வைத்து கண்ணே கலைமானே என்ற படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியான்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார்.
கண்ணே கலைமானே படத்தின் பாடல்கள் ரிலீஸ்
கடந்த 2018ம் ஆண்டு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி 45 நாட்களில் முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்த நிலையில், கண்ணே கலைமானே வரும் பிப்ரவரி 1ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
வைரமுத்துவின் வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் 3 பாடல்கள் அனைத்தும் நேற்று வெளியானது.