/tamil-ie/media/media_files/uploads/2021/01/kannum-kannum.jpg)
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அப்படத்தின் இரண்டாவது கதாநாயகியாக நடித்த நிரஞ்சனியை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
கடந்தண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் சிறந்த திரைப்படம் எனப் பெயர்பெற்ற 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்தில் ரிது வர்மா தோழியாக நிரஞ்சனி அகத்தியன் நடித்து பெயர்பெற்றார்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ??
கல்யாணம் !! ❤️@desingh_dp@Niranjani_Ninipic.twitter.com/eTqRd3xOFm
— Thiru (@dir_thiru) January 26, 2021
தேசிய திரைப்பட விருதைப் பெற்ற இயக்குநர் அகத்தியன் காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரின் முதல் மகள் கார்த்திகா (கனி- குக் வித் கோமாளி புகழ் ) இயக்குநர் திருவையும் மணந்தார். இரண்டாவது மகள் விஜயலட்சுமி (சென்னை - 28 ) இயக்குநர் பெரோஸை மணந்தார். மூன்றாவது மகள் நிரஞ்சனா தற்போது இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை மணக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kalyana season starts????????
enga veetu kalyana no1????????#kalyanamasam#nalangu#oremarumagalpic.twitter.com/Z7frCqisqO
— கனி (@karthigathiru) January 23, 2021
Congrats guys ????♥️@desingh_dp@Niranjani_Nini#febmarriagepic.twitter.com/8YGoHEVweX
— Vijayalakshmi A (@vgyalakshmi) January 26, 2021
நிரஞ்சனி வாயை மூடி பேசவும், சிகரம் தொடு, காவியத் தலைவன், கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.