/indian-express-tamil/media/media_files/2025/09/24/kantara-2025-09-24-17-01-20.jpg)
வியூஸ்களை அள்ளித் தட்டும் 'காந்தாரா சாப்டர் 1' டிரெய்லர்: இன்ஸ்டாவில் புதிய சாதனை!
நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி நடித்த திரைப்படம் ‘காந்தாரா’. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘காந்தாரா’ திரைபடம் கடந்த 2022-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது.
முதலில் கன்னடத்தில் மட்டும் வெளியான இப்படம் அடுத்ததாக அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ரூ.16 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
‘காந்தாரா’ திரைப்படம் முதலில் சீக்குவலாக வெளியான நிலையில் தற்போது அப்படத்தின் ப்ரீக்குவல் வெளியாகவுள்ளது. அதாவது ‘காந்தாரா சாப்டர் 1’ பாகம் வெளியாகவுள்ளது. இந்த பாகத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
’காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. பழங்குடியினருக்கும் மன்னருக்குமான நில உரிமை பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தின் டிரைலர் இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது, 24 மணி நேரத்தில் இந்திய அளவில் இன்ஸ்டாகிராமில் அதிக ஷேர் செய்யப்பட டிரைலர் என்ற புதிய சாதனையை இப்படத்தின் டிரைலர் படைத்துள்ளது. இந்த டிரைலர் 1.2 மில்லியன் ஷேர் செய்யப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக, ’காந்தாரா’ திரைப்படக் குழுவினர் வெளியிட்டது போன்று சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்று வைரலானது . அதில், ’காந்தாரா சாப்டர் 1’ படம் பார்க்க வரும் ரசிகர்கள் மது அருந்தவோ, புகைப்பிடிக்கவோ, அசைவம் சாப்பிடிருக்கவோ கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
The divine spectacle ignites a storm across the internet… 🔥💥#KantaraChapter1 Trailer is now the Most Shared Trailer Ever on @Instagram, with over 𝟏.𝟐 𝐌𝐈𝐋𝐋𝐈𝐎𝐍+ 𝐒𝐡𝐚𝐫𝐞𝐬.
— Hombale Films (@hombalefilms) September 23, 2025
Watch #KantaraChapter1Trailer now – https://t.co/YVnJsmn7Vx
In cinemas… pic.twitter.com/QH62ScH8pf
தொடர்ந்து, இந்த போஸ்டர் குறித்து நடிகர் ரிஷப் ஷெட்டி அளித்துள்ள பதிலில், “அந்த போலி போஸ்டரை முதலில் பார்க்கும் பொழுது எங்களுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஒரு போலியான விஷயத்திற்கு ஏன் விளக்கமளிக்க வேண்டும் என்றே நாங்கள் எதுவும் சொல்லவில்லை.
உணவு என்பது அவரவர் உரிமை மற்றும் விருப்பம் சார்ந்தது. யாரோ கவனம் ஈர்ப்பதற்காக இவ்வாறு செய்துள்ளனர். இதற்கும் ‘காந்தாரா’-விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.