Karnan full movie leaked by tamilrockers: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே சட்டவிரோதமாக பைரஸியில் படங்களை இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் கர்ணன் முழு படத்தையும் ஆண்லைனில் லீக் செய்துள்ளனர்.
பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து பெரும் வரவேற்பை பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ், தனது இரண்டாவது படமாக நடிகர் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். கர்ணன் திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கர்ணன் படத்தில் நடிகர் தனுஷுடன் ரஜிஷா விஜயன், அழகம் பெருமாள், யோகி பாபு, பூ ராம், லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.
கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்டா வரச் சொல்லுங்க…’ ‘என் ஆளு பேரு மஞ்சணத்தி’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கர்ணன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. கர்ணன் திரைப்படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கர்ணன் திரைப்படம் பிரமாதமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சினிமா விமர்சகர்களும் கர்ணன் படம் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் பாராட்டி வருகின்றனர்.
கர்ணன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகிற நிலையில், எந்தப் படம் வந்தாலும் சட்டவிரோதமாக ஆண்லைனில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் கர்ணன் முழு படத்தையும் ஆன்லைனில் லீக் செய்துள்ளனர். கர்ணன் படம் திரையரங்குகளில் வெளியாகி சில மணிநேரங்களிலேயே முழு படத்தையும் ஆன்லைனில் லீக் செய்யப்பட்டுள்ளதால் கர்ணன் படக்குழுவினரும் தனுஷ் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"