/tamil-ie/media/media_files/uploads/2021/04/karnan-dance-video.jpg)
பரியேறும் பெருமாள் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ், இரண்டாவது படமாக கர்ணன் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டு தற்போது வரை வெற்றிகரமாக ஒடி வருகிறது. இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கர்ணனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்திருப்பார். கலைப்புலி தாணு தயாரித்த இப்படத்தில், கௌரி கிஷன், லால், யோகிபாபு, ’பூ’ ராமு, நட்ராஜ், லக்ஷ்மி பிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கர்ணன் படத்தின் 'கண்டா வர சொல்லுங்க', 'மஞ்சனத்தி புராணம்', ’தட்டான் தட்டான்’, 'உட்றாதீங்க யப்போ' போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாகவும் மாரி செல்வராஜுடன் இணைய போவதாக தனுஷ் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் கர்ணன் திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்த வீடியோக்களை நடிகை கௌரி கிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் படபிடிப்பின் போது, சில மனிதர்கள் மற்றும் சில நிகழ்வுகள் என்னை மகிழ்வூட்டியது எனவும் பதிவிட்டுள்ளார்.
மேலும், வீடியோவில் இயக்குனர் மாரி செல்வராஜ் டான்ஸ் ஆடுவது போன்று ஒரு காட்சி உள்ளது. படத்தில் தனுஷ் யானை மீது அமர்ந்து வரும் காட்சியில் கீழே எல்லோரும் ஆடிக்கொண்டிருப்பார்கள், அந்த காட்சி படபிடிப்பின்போது அங்கு ஆடி கொண்டிருந்தவர்கள் மாரி செல்வராஜையும் ஆட வற்புறுத்துவார்கள். அவரும் டான்ஸ் ஆடுவார். மேலும் பல்வேறு சூட்டிங் ஸ்பாட் போட்டோக்களும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
நடிகை கௌரி கிஷன் இன்னொரு பதில் தனக்கு கர்ணன் படத்தில் நல்ல ஒரு கதாப்பாத்திரத்தை வழங்கிய மாரி செல்வராஜ்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.