ஆங்கிலத்தில் படிக்க...
தனது தந்தை சிவக்குமார் நானும் சகோதரர் சூர்யாவும் திரைத்துறைக்கு வருவதை விரும்பவில்லை என்று நடிகர் கார்த்தி வெளிப்படையாக பேசியுள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது குக்கூ படத்தின் இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். அனு இம்மானுவேல், சுனில் மற்றும் விஜய் மில்டன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் நடிகர் கார்த்தி இதுவரை நடிக்காத ஒரு புதுவித தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் மிகப்பெரிய ஆக்ஷன் படமாக இருக்கும் என்று சமீபத்தில் வெளியான டீசர் மூலம் தெரியவந்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையில், கார்த்தி சமீபத்தில் தனது தந்தையும் முன்னாள் க்ளாசிக் ஹீரோவுமான சிவக்குமார் தன்னையும் அவரது சகோதரர் சூர்யாவையும் திரைப்படங்களில் நடிப்பதற்கு எவ்வாறு ஊக்கம் அளித்தார் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் சிவகுமார் தனது பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வி என்ற அடித்தளத்தை வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாக சுட்டிக்காட்டியுள்ள நடிகர் கார்த்தி, “அப்பா எப்பொழுதும் எங்களை படங்களில் இருந்து விலக்கி விடுவார். நாங்கள் திரைப்படங்களில் எந்த துறையிலும் பணியாற்றுவதை அவர் விரும்பவில்லை. ‘படிக்கணும், நல்லா படிக்கணும், டிகிரி வாங்கணும், நாம எப்பவுமே நல்லா படிக்கணும்’னு என்று கார்த்தி தனது தந்தை சிவக்குமார் கூறியதை நினைவுகூர்ந்தார்.
தனது தந்தையின் ஊக்கத்தால், சென்னையில் பொறியியல் படித்த கார்த்தி பின்னர் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்தார். அங்கு இருந்தபோது, கிராஃபிக் டிசைனுக்கான அவரது திறமை, படைப்புத் துறையில் பணியாற்றுவதற்கான அவரது விருப்பத்தை உணர்ந்து, அவரை திரைப்படத் தயாரிப்பு படிப்புகளில் சேர தூண்டியது. தொடர்ந்து இந்தியா திரும்பிய பிறகு, கார்த்தி பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக சேர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து ஆயுத எழுத்து படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்த கார்த்தி 2007-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதேபோல் நெருங்கிய பந்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் சகோதரர்களாக இருந்தாலும், கார்த்தியும் சூர்யாவும் இதுவரை இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. மணிரத்னத்தின் அரசியல் ஆக்ஷன் படமான ஆயுத எழுத்து படத்தில் கூட கார்த்தி உதவி இயக்குநராகப் பணியாற்றியபோதுதான் ஒரு காட்சியில் நடித்தார். இந்த படத்தில் சூர்யா, சித்தார்த் மற்றும் மாதவன் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
தமிழ் திரையுலகில் சிவக்குமார் சூர்யா கார்த்தி ஆகிய மூவரையும் ஒன்றாக திரையில் பார்க்க மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருப்பதாக குறிப்பிட்ட கார்த்தி, தங்கள் தந்தை கேமரா முன் நடிக்கும் ஆர்வத்தை இழந்துவிட்டார் என்று குறிப்பிட்டார். “ஆனால் நானும் என் சகோதரனும் ஒரு நல்ல கதையைக் கண்டுபிடித்து அதில் இணைந்து நடிக்க வேண்டும் என்று நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம்.
நாங்கள் நிச்சயமாக ஒரு நல்ல படத்தை ஒன்றாகச் செய்ய விரும்புகிறோம். முன்பு, நான் பயந்தேன். இப்போது நாங்கள் இருவரும் உறுதியாக இருக்கிறோம், நாம் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். கார்த்தியின் ஜப்பான் தீபாவளி சீசனில் நவம்பரில் திரைக்கு வரவுள்ள நிலையில், சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“