செப்டம்பர் 27-ல் வெளியாகிறதா கார்த்தியின் கைதி?

Karthi's Kaithi: ஒரே இரவில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தை, 62 இரவுகளில் படமாக்கியிருக்கிறார்கள் படக்குழுவினர்.

Kaithi Release Date: அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கரின், ‘தேவ்’ படத்தில் இறுதியாக நடித்திருந்தார் நடிகர் கார்த்தி. இதில் ரகுல் ப்ரீத் சிங், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரகாஷ்ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். லவ் & ரொமாண்டிக் களத்தில் உருவாகிருந்த இப்படம் காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகியிருந்தது.

இதைத் தொடர்ந்து ‘கைதி’ படத்தில் கமிட்டானார் கார்த்தி. ’மாநகரம்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கி வருகிறார். தற்போது படபிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷனில் இருக்கிறது ’கைதி’. டைட்டிலுக்கு ஏற்றபடி, இதில் ‘கைதி’யாக நடிக்கிறார் கார்த்தி. ஒரே இரவில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தை, 62 இரவுகளில் படமாக்கியிருக்கிறார்கள் படக்குழுவினர். இதில், கார்த்தியுடன் இணைந்து வட்சன், தீனா, நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

’கைதி’ படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின் படி, செப்டம்பர் 27-ஆம் தேதி உலகம் முழுக்க ‘கைதி’யை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம் படக்குழுவினர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கடுத்து விஜய்யின் ‘தளபதி 64’ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவது குறிப்பிடத்தக்கது!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close