scorecardresearch

போன முறை பிகில்-கைதி: மீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி?

2021 பொங்கலுக்கு விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

போன முறை பிகில்-கைதி: மீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி?
விஜய் – கார்த்தி

ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வி என்னவென்றால், நடிகர் கார்த்தி மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் நடிகர் விஜய்யுடன் மோதுவாரா என்பது தான்.

குளிர் காலத்தில் கொரோனா பரவல் புதிய உச்சம் தொடும் அபாயம் ஏன்?

கடந்த ஆண்டு தீபாவளி பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படமும், கார்த்தியின் ‘கைதி’ திரைப்படமும் ஒன்றாக மோதியது. இந்நிலையில் கார்த்தியின் அடுத்த படமான ‘சுல்தான்’ படத்தின் படபிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை பண்டிகை காலத்தில் ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதே நேரத்தில் 2021 பொங்கலுக்கு விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக, மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யுடன், கார்த்தி மீண்டும் மோதுவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ‘சுல்தான்’ தயாரிப்பாளர்கள் ‘மாஸ்டர்’ படத்துடன் அதனை வெளியிட விரும்பினால், அதில் தவறேதும் இல்லை. ஏனெனில் அவர்கள் இருவருமே தங்கள் கடைசி மோதலின் போது வெற்றி பெற்றனர். ஆனால் நிலைமை எவ்வாறு மாறுகிறது, தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பதைப் பார்க்க நாம் காத்திருக்க வேண்டும். அதோடு தமிழில் பல பெரிய வெளியீடுகள் உள்ளன. அவை பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வர பொருத்தமான தேதிக்காக காத்திருக்கின்றன.

மீண்டும் சொதப்பிய பஞ்சாப்: பெரும் வெற்றி பெற்ற ஹைதராபாத்!

இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள ‘சுல்தான்’ திரைப்படத்தில், கார்த்தி மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பேனரின் கீழ், எஸ்.ஆர்.பிரபு இதனை தயாரித்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Karthi sultan clash with thalapathy vijay master for pongal