Advertisment

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை காதல் திருமணம்: மாலையும் கழுத்துமாக வெளியான போட்டோ

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  ‘கார்த்திகை தீபம்’ சீரியல் நடிகை காதல் திருமணம் செய்துகொண்ட பின், மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

author-image
WebDesk
New Update
Arthika marriage

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை ஹர்த்திகாவுக்கு காதல் திருமணம்

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  ‘கார்த்திகை தீபம்’ சீரியல் நடிகை காதல் திருமணம் செய்துகொண்ட பின், மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Advertisment

தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் முக்கிய நிகழ்ச்சிகளாக சீரியல்களே இருந்து வருகிறது. சமூக ஊடகங்களின் காலத்தில், சினிமா நடிகர்கள், நடிகைகளைவிட சீரியல் நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியல் ஹீரோ நடிகர் கார்த்திக் ராஜ், ஹீரோயின் நடிகை ஹர்த்திகா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள்.

Karthigai deepam

‘கார்த்திகை தீபம்’ சீரியல் தொடங்கபட்டது முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த சீரியலின் ஹீரோ, முன்னதாக இதே ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர்.  பின்னர், இவர் வெப் சீரிஸில் நடிப்பதற்காக சீரியலில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார். 

இதையடுத்து, மீண்டும் ஜீ தமிழில்  ‘கார்த்திகை தீபம்’ சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த சீரியலில் கார்த்திக் ராஜ்-க்கு ஜோடியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹர்த்திகாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவருடைய ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. 

arthika marriage

இந்த நிலையில்தான், ‘கார்த்திகை தீபம்’ சீரியல் ஹீரோயின் ஹர்த்திகாவுக்கு காதல் திருமண நடைபெற்றுள்ளது. ஹர்த்திகா திருமணத்துக்குப் பின், தனது கணவருடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஹர்த்திகாவின் திருமண புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Arithika marriage

‘கார்த்திகை தீபம்’ சீரியல் நடிகை ஹர்த்திகாவை பலரும் புதுமுகம் என்று கருதினாலும், இவர் தமிழ், மலையாள சினிமாக்களில் நடித்துள்ளார்.    கேரளாவை சேர்ந்த ஹர்த்திகா, கோட்டயத்தில் பிறந்து வளர்ந்தவர். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரை உலகில் கால் பதித்திருக்கும் ஹர்த்திகாவுக்கு இன்னும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சினிமாவில் சரியான வாய்ப்புகள் அமையாததால் சீரியலுக்கு வந்த ஹர்த்திகாவுக்கு கார்த்திகை தீபம் சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுத் தந்துள்ளது.

ஹர்த்திகா தமிழில் கதாநாயகியாகவும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பிளாக் அண்ட் வொயிட் படத்தில் ஹர்த்திகாவுக்கு ஜோடியாக கார்த்திக் ராஜ் நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து, ஹர்த்திகா - கார்த்திக் ராஜ் கார்த்திகை தீபம் சீரியலிலும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

காத்திகை தீபம் சீரியலில் ஹர்த்திகா நடிப்பதற்கு திருமதி செல்வம் நடிகை அபிதா அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. 

இந்த நிலையில் நடிகை ஹர்த்திகா காதல் திருமணம் செய்துகொண்ட தகவல் வெளியாகி உள்ளது. ஹர்த்திகா திருமணம் செய்துகொண்டபின், தனது கணவருடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டா கிராமில் வெளியிட்டுள்ளார்.

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை ஹர்த்திகாவுக்கு கேரளாவில் நவம்பர் 6-ம் தேதி கேரளாவில் நடைபெற்றது. தனது காதலரைக் கரம்பிடித்திருக்கும் ஹர்த்திகா கணவருடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அதில், ‘எனது வாழ்க்கையின் சிறந்த தருணங்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஹர்த்திகாவின் திருமண புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

arthika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment