New Update
/indian-express-tamil/media/media_files/kMsnOj4OoJQnDcrtwctj.jpg)
Surya 44 Movie Update
00:00
/ 00:00
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும், இந்தப் படத்தை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.
Surya 44 Movie Update
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத படத்தில், நடிகை பூஜா ஹெக்டே முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கும் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இது சூர்யாவின் 43-வது படமாகும். மதுரையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றும் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் ‘புறநானூறு படத்துக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது’ என படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியது. சுதா கொங்கராவின் படம் தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், அதற்குள் 'சூர்யா 44' படப் பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட திட்டமிட்டு வருகிறார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும், இந்தப் படத்தை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.
சூர்யாவின் 44 வது படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ஜூன் முதல் வாரம் அந்தமானில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.