New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/01/a466.jpg)
Karthi's Next: ’தேவ்’ படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இதனையும் தயாரிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Karthi's Next: அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கரின் இயக்கத்தில் நடிகர் கார்த்தி ‘தேவ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
இந்நிலையில் ‘மாநகரம்’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இயக்கும் ‘கைதி’ படத்தில் நடித்து முடித்திருக்கும் கார்த்தி, இயக்குநர் ஜித்து ஜோசப்பின் படத்தில் பிஸியாக உள்ளார். இந்தப் படத்தில் ஜோதிகா மற்றும் நிகிலா விமல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அதோடு, ‘ரெமோ’ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் அடுத்தப் படமும் கார்த்தியின் கை வசம் உள்ளது. இதை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்நிலையில் மற்றும் ஒரு படத்தில் கார்த்தி கமிட்டாகியிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அடங்கமறு’ படத்தின் இயக்குநர் கார்த்திக் தங்கவேலின் அடுத்தப் படத்தில் நடிக்கிறாராம் கார்த்தி.
’தேவ்’ படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இதனையும் தயாரிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.