பாலிவுட்டின் அடுத்த பிரேக் அப்: நேரமில்லாதது தான் காரணமா?

தன்னை விட 12 வயது மூத்தவரான அம்ரிதாவை விவாகரத்து செய்து விட்டு, கரீனா கபூரை மணந்துக் கொண்டார் சாயிஃப்.

Sara Ali Khan - Kartik Aryan
Sara Ali Khan – Kartik Aryan

Kartik Aryan – Sara Ali Khan: பாலிவுட் நட்சத்திரங்கள் சாரா அலிகானும்  கார்த்திக் ஆர்யனும் தங்கள் ரிலேஷன்ஷிப்பை முடித்துக் கொண்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. நடிகர் சாயிஃப் அலிகான், அவரது முதல் மனைவி அம்ரிதா சிங் ஆகியோரின் மகள் தான் சாரா அலி கான். தன்னை விட 12 வயது மூத்தவரான அம்ரிதாவை விவாகரத்து செய்து விட்டு, கரீனா கபூரை மணந்துக் கொண்டார் சாயிஃப். இவர்களுக்கு தைமூர் கான் என்ற மகன் இருக்கிறான்.

சரி சாரா அலி கானின் காதல் விவகாரத்துக்கு வருவோம். 20-களில் இருக்கும் கார்த்திக்கும், சாராவும் தொழில்முறையாக நிறைய திட்டங்களைக் கொண்டிருக்கிறார்களாம். இதனால் இருவருக்கும் மிகக் குறைவான நேரம் தான் கிடைக்கிறதாம். தங்களின் ரிலேஷன்ஷிப்பை வலுப்படுத்துவதற்கான நேரமும், சூழலும் சரியான அமையாததால், இருவரும் கலந்து பேசி, தங்கள் உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, நட்பை மட்டும் தொடரலாம் என முடிவெடுத்திருக்கிறார்களாம்.

இதற்கிடையே முன்னணி ஊடகத்தில் பேசிய சாராவின் தந்தை சைஃப் அலிகான், சாரா – கார்த்திக்கின் உறவுக்கு ஒப்புதல் அளித்ததாகக் கூறினார். “சாரா நல்லவர், அவளுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பாள். பொதுவாக நல்லவர்களை அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். எனவே கார்த்திக் நல்ல குணமுடையவர் என நான் நம்புகிறேன். ஏனென்றால் அவளுடைய முடிவுகள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஆக சாரவுக்கு கார்த்திக்கைப் பிடித்திருந்தால், அவர் நிச்சயம் நல்லவராக இருக்க வேண்டும்” என்றார்.

”அவர்கள் பிரிந்துவிட்டார்கள், இதை மிகவும் இணக்கமாக செய்திருக்கிறார்கள். சாராவுக்கும் கார்த்திக்கும் இடையில் எந்த மோசமான செயல்பாடுகளும் இல்லை. இன்னும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கிறார்கள். இருவரும் தொடர்ந்து நண்பர்களாக இருப்பார்கள்” என சாராவுக்கும், கார்த்திக்கும் நெருக்கமானவர்கள் பாலிவுட் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kartik aryan sara ali khan love break up

Next Story
”பாரதி கண்ணம்மா” சீரியலில் ”ராஜா ராணி” செம்பா!Alya Manasa, tamil serial news, raja rani semba
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com